நித்தியக்கடன் மார்ச் 05 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 05


🍥♨️🍥♨️🍥♨️🍥♨️🍥♨️🍥


♾️ இன்றைய நித்தியக்கடன்


♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♾️ இன்றைய சாதகம்


♾️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


♾️ இன்றைய நற்சிந்தனை


♾️ வாழ்க்கையினுடைய அசைவுக்கும், இசைவுக்கும் ஏற்ப சற்று அதில் இருந்து விலகியும், நகர்ந்து கொண்டே இருக்கிறோம்.

மனதினுடைய முன்னும், பின்னும் ஒரு உந்துதல் பழைய அனுபவங்களோடும், புதிய புதிய நினைவுகளோடும் எதிர்கால திடமான திட்டம் இல்லாமல் வாழ்க்கை பாதை வளைந்து, நெளிந்து, மேடு பள்ளத்தில் ஏறியும், இறங்கியும் சாலைகளில் உள்ள நில், கவனி, புறப்படு என்பது போல வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.


♾️ இன்றைய தற்சோதனை


♾️ நிமிடத்துக்கு நிமிடம் காலத்துக்கு காலம் பலவகையான நிறுத்தங்களும், திருப்புமுனைகளும் வாழ்க்கையில் அமைகிறது. தற்சோதனை செய்து இவைகளை எல்லாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவுதான் நுண்மாண் நுழைபுலன் அறிவு இந்த அறிவை தவம், தற்சோதனை இவைகளை கொண்டு மட்டும்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.


♾️ இன்றைய பண்புப்பயிற்சி


♾️ கொண்டுவந்த வினைகளுக்கு ஏற்பவும் தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மனிதனுடைய இந்த வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. பன்னெடுங்காலமாக மனித சமுதாயத்தின் சரித்திரம் இப்படித்தான் இருக்கிறது. சரியான செயலும், நோக்கமும், திட்டமும், முறையான பயிற்சியும் இருந்தால் மட்டும் தான் கரடுமுரடான வாழ்க்கையை இலகுவான பாதையாக, பயணமாக மாற்றி அமைக்க முடியும். நந்நோக்கத்துடன் வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...


♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments