நித்தியக்கடன் மார்ச் 03 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 03


🌼🔶🌼🔶🌼🔶🌼🔶🌼🔶🌼


🔮 இன்றைய நித்தியக்கடன்


🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔮 இன்றைய சாதகம்


🔮 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🔮 இன்றைய நற்சிந்தனை


🔮 ஒரு மனிதன் தன்னுடைய அனுபவத்தை தாண்டி எதையும் சிந்திக்கவும், எந்த ஒன்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே மனிதனுடைய அனுபவ அறிவு என்பது மனித வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த அறிவின் அடிப்படையிலேயே அவர்களுடைய எல்லா வகையான செயல்களும் பழக்கவழக்கங்களும் அமைந்துவிடுகிறது. அனுபவ அறிவு என்பது மிகவும் முக்கியமான கவனத்தை பெறுகிறது.


🔮 இன்றைய தற்சோதனை


🔮 உங்களுடைய அனுபவ அறிவு தான் உங்களை வழிநடத்துகிறது. ஆக அனுபவ அறிவு எவ்வாறு இருக்க வேண்டும், என்பதை நாம்தான் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எதில் எல்லாம் ஆர்வம் காட்டி எதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான முயற்சி, தேடல், தற்சோதனை அனைத்தும் அனுபவ அறிவாகும்.


🔮 இன்றைய பண்புப்பயிற்சி


🔮 உங்களுடைய அனுபவத்தின் வாயிலாக மற்றவர்களுக்கும்  தனக்கும் உதவியாக இருக்கும் பழக்கவழக்கங்களையும்  பண்புகளையும்  உளமாற ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில், செயல்கள் செய்தால் ஒருநாளும் அந்த வாழ்க்கையில்  தோல்வியை சந்திப்பது இல்லை. தோல்வியில் இருந்தும்கூட நாம் பாடம் கற்கிறோம். நாம் செய்த சில தவறுகள் அதன் வழியாக வெளிப்படுகிறது. ஆகவே நாம்  எல்லோருக்கும் நல்லதையே நினைத்து வாழ்வையும் அப்படியே வாழ்வோம். வாழ்க வளமுடன்...


🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments