நித்தியக்கடன் டிசம்பர் 28 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 28


♦️🔮♦️🔮♦️🔮♦️🔮♦️🔮♦️


💦 இன்றைய நித்தியக்கடன்


💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💦 இன்றைய சாதகம்


💦 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


💦 இன்றைய நற்சிந்தனை


💦 ஆன்மீக வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு கட்டமாகத்தான், நாம் நம்மை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். அதில் முறையாக உணர்தல், அனுபவித்தல், பிரதிபலித்தல் என்ற இந்த வரிசை மாறாத அனுபவத்தோடு, பயிற்சி முயற்சி என்று வாழ்ந்தால் உயிரை உணராலாம். அதைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.


💦 இன்றைய தற்சோதனை


💦 நாம் சரியாகத்தான் உணர்கின்றோமா என்பதற்கு, முன்னமே வாழ்ந்து அதை பதிவு செய்த நம்முடைய குருமார்களின் அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, விஞ்ஞானபூர்வமாக ஒரு விஷயத்தில் நாம் தெளிவு பெற வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு எதையும், எவரோடும், எப்போதும், எங்கேயும், எவரிடத்திலும் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளக் கூடாது. நன்றாக தற்சோதனை செய்து தெளிவு பெற்ற பின், அதை தெளிவான சான்றுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து விஞ்ஞானப்பூர்வமாக, உணர்வோடு பகிர்ந்து கொள்ளலாம்.


💦 இன்றைய பண்புப்பயிற்சி


💦 மற்றவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகவல்கள் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க வேண்டும், என்ற பண்பில் உயர வேண்டும். இந்தப் பண்பினை உளமாற ஏற்று இதன் வழி வாழத் துவங்கினால் உள்ளதை உணர்ந்து, நல்லதை செய்து, அல்லது தவிர்த்து வாழும் பண்பும் நமக்குள் ஆழமாக வேரூன்றி வளரத்துவங்கும். மனதின் மாண்பினை மதிப்போடு உயர்த்திக் கொண்டு மகரிஷியின் இந்த வார்த்தைக்கு ஏட்ப மாநிதியம் இறைநிலையை தம் மனத்தடியில் தேர்வோம். வாழ்க வளமுடன்...


💦 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💦 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments