வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 25
⏺️♨️⏺️♨️⏺️♨️⏺️♨️⏺️♨️⏺️
🕸️ இன்றைய நித்தியக்கடன்
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ இன்றைய சாதகம்
🕸️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🕸️ இன்றைய நற்சிந்தனை
🕸️ அதிகம் உறங்குபவர் அல்லது உறங்காமலேயே இருப்பவர், அதிகம் உண்பவர் அல்லது உண்ணாமலேயே இருப்பவர் இவர்களுக் கெல்லாம் இந்த குண்டலினி யோகம் சாத்தியம் கிடையாது. பகவத்கீதையில் வியாசர் இந்த வாசகத்தை தெளிவாக பதிவு செய்து இருக்கிறார். முழுக்க முழுக்க மறுக்கமுடியாத உண்மை. குண்டலினி யோகத்தில் வளர்ச்சி பெறவேண்டுமானால் இந்த ஒழுங்கமைப்பை, கோட்பாட்டை, கட்டமைப்பை, நீதியை பின்பற்றித்தான் ஆகவேண்டும் வேறு வழியே கிடையாது.
🕸️ இன்றைய தற்சோதனை
🕸️ இந்த செயலுக்கு இது தான் விளைவு என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது ஒரு நாளும் ஒரு பொழுதும் மாற்ற முடியாது. அனால் இந்த செயல் விளைவு நீதியின் விகிதாச்சாரம் மாறலாம். அந்த மாற்றமும் எதனால் அமைகிறது என்றால், அது அவர்களுடைய கருமைய தூய்மையையும், தன்மையையும் பொருத்தும் அமைகிறது. இந்த விகிதாச்சார செயல்விளைவு நீதியை சரியான சிந்தனையாலும், தற்சோதனையாலும் இதனை சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்.
🕸️ இன்றைய பண்புப்பயிற்சி
🕸️ பொறுமை, நிதானம், உற்றுணர்தல், நடுநிலை வகித்தல், தன்னை தானேகண்காணித்தல், விழிப்பு நிலையோடு தன்நிலை உணர்தல், தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல் என்ற இப்பண்புகளால் செயல் விளைவு விகிதாச்சார நீதியை ஐயமே இல்லாமல் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ முடியும். வாழ்க வளமுடன்....
🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment