வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 20
🎯🎲🎯🎲🎯🎲🎯🎲🎯🎲🎯
❄️ இன்றைய நித்தியக்கடன்
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ இன்றைய சாதகம்
❄️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
❄️ இன்றைய நற்சிந்தனை
❄️ ஒரு நூல் கண்டு சிக்கலாகிவிட்டது என்றால் அந்த சிக்கலை பிரிப்பதற்கு பொறுமையும், நிதானமும் மிகவும் அவசியம். வாழ்க்கையில் இதுபோல பல சமயங்களில் சிக்கல்கள் உருவாகும். இந்த சிக்கல்களை பிரிப்பதற்கு நீங்கள் அமைதியையும், பொறுமையையும், கையாளவேண்டும். அவசரமும், ஆவேசமும் ஒரு நாளும் மனித வாழ்க்கையை வெற்றிக்கு அழைத்துச் செல்லாது.
❄️ இன்றைய தற்சோதனை
❄️ எதற்காக இந்த போராட்டம்? ஏன் இந்த பதட்டம்? இப்படியே தான் வாழ்க்கை சென்றுகொண்டே இருக்குமா? இதிலிருந்து மாற்றமே கிடையாதா? என்று பல கேள்விகள் உள்ளத்தில் எழும். இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்களுக்குள்ளா கத்தான் இருக்கிறது. கேள்விகளுக்கு பதிலை வெளியே தேடாமல் உள்ளுக்குள் தேடுங்கள். (கட+உள்=கடவுள்) உங்களுக்குள்ள கடந்து சென்று கொண்டே இருங்கள். அனைத்து கேள்விகளுக்கும் விடை அங்கேயே இருக்கிறது. தற்சோதனைக்கு மனதில் இடம் கொடுக்க கொடுக்க உள்ளே கடந்து செல்லலாம்.
❄️ இன்றைய பண்புப்பயிற்சி
❄️ அனைத்தையும் பகுத்து அறியும் அறிவே ஆறாவது அறிவாகும். இதை தொகுத்து உணரக்கூடிய பண்பில் பண்போடு இணைத்துக்கொள்ள வேண்டும். பகுத்துப் பகுத்து அறிந்து கொண்டே போனால் கடைசியில் எதுவுமே இருக்காது. அதனையும் தொகுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு தான் பூரணமான அறிவாகும். இந்த பூரணமான அறிவில் தொகுத்து உணரும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment