நித்தியக்கடன் டிசம்பர் 13 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 13


🔰🚥🔰🚥🔰🚥🔰🚥🔰🚥🔰


💥 இன்றைய நித்தியக்கடன்


💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💥 இன்றைய சாதகம்


💥 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


💥 இன்றைய நற்சிந்தனை


💥 உங்களுக்கு மிகவும் பிடித்த இடங்களுக்கு அடிக்கடி செல்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகிறீர்கள். இவ்வாறாக பிடித்தது பிடிக்காதது என்ற மனப்பான்மை நம்மிடம் இருக்கும் வரை ஆத்ம தரிசனம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.


💥 இன்றைய தற்சோதனை


💥 ஏன் இந்த விருப்பு வெறுப்புக்குள் நம்மை சிக்கவைத்து கொண்டு நாம் சிதற வேண்டும். சிறப்புமிக்க இறையாற்றலோடு இணைய வேண்டுமானால், நடுநிலையோடு வாழுதல் வேண்டும். மனதை அதற்கு பழக்கப்படுத்துங்கள். தற்சோதனையை பலமாக பயன்படுத்தி விருப்பு, வெறுப்புகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.


💥 இன்றைய பண்புப்பயிற்சி


💥 நடுநிலையாக இருந்து சிந்தித்து வாழும்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு இறைசக்தி, அருள்பேற்றல் நமக்குள் பெருகுவதை உணரலாம். இந்த நடுநிலை பண்பு தான் நமக்கும் இறைநிலைக்கும் பாலமாக இருக்கிறது. நடுநிலையோடு வாழும்போது நாம் இறைவனை நெருங்குகிறோம். வாழ்க வளமுடன்...


💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments