வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 10
🕳️⚙️🕳️⚙️🕳️⚙️🕳️⚙️🕳️⚙️🕳️
🏮 இன்றைய நித்தியக்கடன்
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏮 இன்றைய சாதகம்
🏮 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🏮 இன்றைய நற்சிந்தனை
🏮 இறைநிலையினுடைய பல்வேறு தன் மாற்றங்களில் மனித இனமும் ஒன்று. நமக்கு சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அறிவும், சுதந்திரமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த சுதந்திரத்தை நாம் தவறாக பயன்படுத்துவதால் உடலில் நோயும், வாழ்க்கையில் சிக்கல்களையும், மனதில் குழப்பத்தையும் உருவாக்கிக் கொள்கிறோம். இதையெல்லாம் நாமாக செய்து கொண்டதே தவிர இறைநிலை நமக்கு எந்த ஒரு துன்பத்தையும் கொடுக்கவில்லை.
🏮 இன்றைய தற்சோதனை
🏮 இந்த பூமியில் இந்த மனித தோற்றத்தோடு இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம் நிறைவுபெறுகிறது. ஆதலினால் நமக்கு முழு சுதந்திரம் பேரறிவால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சுதந்திரத்தை இந்த கட்டமைப்புக்குள் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்பத்தை ஏற்படுத்துவது இல்லை என்பதே அந்த கட்டமைப்பாகும். நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
🏮 இன்றைய பண்புப்பயிற்சி
🏮 ஒரு வரையறைக்குள் தன்னை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்மிடமே கொடுக்கப்பட்டு விட்டது. மற்ற இல்லாத சுதந்திரம் மனித இனமாகிய நமக்கு கொடுக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, நிறைவாக தொண்டு செய்து நமக்கும் நம்முடைய அடுத்த சமுதாயத்திற்கும் நலமே விளைவிக்கும் பண்பினை உளமாற ஏற்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment