வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 09
⭕🐾⭕🐾⭕🐾⭕🐾⭕🐾⭕
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 சனிக்கிழமை
காலை சாந்தி தவம். மாலை நித்தியானந்தம் தவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 நம்மை சுற்றி இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள், சமுதாயத்தினர் நமக்கு நிறைய வழிகாட்டுதல்களை தெரிவிக்கலாம். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதும் மதிப்புக் கொடுப்பதும் மிகச் சிறந்த பண்பு. இந்த பண்பு தான் ஒரு மனிதனை மனிதன் ஆக்க வல்லது. ஆனால் நமக்கான வாழ்க்கை பாதையை நாம்தான் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின் விளைவுகளை ஆய்வு செய்து முறையாக அந்த செயல்களை ஏற்பதுதான் அறிவுபூர்வமானதாகும். எதிர்கால வாழ்க்கை என்பது தற்காலத்தில் எடுக்கும் முடிவினால் திட்டத்தினால் தான் அமைகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
🚥 இன்றைய தற்சோதனை
🚥 ஒருவருடைய அனுபவம் மற்றவர்களுக்கு பொருந்துமா என்றால், அதை ஒரு தகவலாக வைத்துக்கொண்டு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அப்படியே அது நமக்கும் நடக்குமென்று எதிர்பார்த்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை பயணம் என்பது இருக்கிறது. அதை கண்டறிந்து அதில் பயணிப்பது தான் ஒவ்வொரு தனிமனிதனுடைய எதிர்காலத்திற்கும் நல்லது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல் "சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித்தே நீ தெளிவாய்"
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 சுயமாக சிந்திப்பது கொஞ்சம் முறைமாறி வேறு வழியில் பயணம் செய்தால், அதுவே தான் தன் முனைப்பாக மாறிவிடும். ஆக மிகுந்த கவனத்தோடு இந்த சுயசிந்தனை கொள்கையை, புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் நல்வினையும் தீவினையும் இருக்கின்றன கொஞ்சம் வழிமாறி திசை திரும்பினாலும், அது நம்மை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment