நித்தியக்கடன் அக்டோபர் 31 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 31


🎲🍁🎲🍁🎲🍁🎲🍁🎲🍁🎲


💠 இன்றைய நித்தியக்கடன்


💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💠 இன்றைய சாதகம்


💠 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


💠 இன்றைய நற்சிந்தனை


💠 இன்னதுதான் நானென்று தெளிவாக விளக்கம் பெறுவதற்கு நாம் நிறைய தியாகங்களை செய்ய வேண்டும். தற்போது நம்மிடையே உள்ள தேவையற்ற பழக்க வழக்கங்களும் எண்ணங்களும் விளங்கினப் பதிவுகளின் வெளிப்பாடாகும். மேலும் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், போட்டி, பொறாமை இந்த துர்குணங்களை எல்லாம் தியாகம் செய்ய வேண்டும்...


💠 இன்றைய தற்சோதனை


💠 பிடித்த உணவு, பிடிக்காத உணவு, பிடித்த நபர்கள், பிடிக்காத நபர்கள் என்றெல்லாம் வேறுபாடுகள் நம்மிடையே இருக்கக்கூடாது. நம்முடைய செயல்களை வடிகட்டி பழகவேண்டும். தேவையில்லாததை எல்லாம் தேவை ஆக்கிக்கொண்டு வாழும்போது, அந்த வாழ்க்கை பலவிதத்தில் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும், தற்காலத்திலோ பிற்காலத்திலோ மிகுந்த சுமையாகிவிடுகிறது, என்ற உண்மையை உணர வேண்டும்...


💠 இன்றைய பண்புப்பயிற்சி


💠 உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவு முறையை காத்தல் வேண்டும். இதனடிப்படையில் இவைகளை முறைப்படுத்தும் போது நாம் செய்யும் செயலானது, அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்க்கும் உண்மையான சொத்தாகும். அவர்களை மனதில் எண்ணி இந்த தியாகத்தை செய்து தான் ஆகவேண்டும். அதனையும் மகிழ்ச்சியான மன நிறைவோடு செய்யவோமாக. வாழ்க வளமுடன்...


💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments