வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 30
💯🌐💯🌐💯🌐💯🌐💯🌐💯
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 ஒரு பாத்திரத்தை தலைகீழாக தண்ணீருக்குள் அழுத்தும்போது, அது மேலே வருவதற்குத்தான் முயற்சி செய்யும். அதே பாத்திரத்தை நேராக தண்ணீருக்குள் அழுத்தும்போது நீர் நிரம்பி பாத்திரம் மூழ்கிவிடும். இது போலத்தான் இறை நீதியையும் அதன் தன்மையையும் புரிந்து கொள்ளாமல் எதிர்நிலையில் நின்று செயல்படும்போது, நாம் இயல்பு தன்மையிலிருந்து மாற்றம் பெறுகின்றோம்.
🚥 இன்றைய தற்சோதனை
🚥 இறை நீதியை ஏற்றுக் கொண்டு அதற்கு ஒத்த முறையில் நம்முடைய செயல்பாடுகளை, அமைத்துக் கொள்ளும் போது அது எதிர்நிலை தன்மையில்லாமல் இறைநிலையோடு ஒன்றென கலந்துவிடுகிறது. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்கலில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். ஆழமாக தற்சோதனை செய்து இதில் வெற்றி பெறுங்கள்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 எங்கேயோ இருந்து கொண்டு இறைவன் நம்மை காப்பாற்றுகிறான், என்ற கற்பனையான எண்ணங்களை விட்டுவிடுங்கள். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளக்கூடிய பண்பில் உயர்வு பெறுங்கள். கற்பனை உயிரை கரைத்து விடும், கலங்கிவிடும் கற்பனையை அறவே விட்டு நமக்குள்ளாகத் தான் இறைவன் இருக்கிறான், என்ற உண்மையை உள்ளவாறு உணர்வோம் நிறைவாய் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment