வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 27
🕸️⭕🕸️⭕🕸️⭕🕸️⭕🕸️⭕🕸️
🍁 இன்றைய நித்தியக்கடன்
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 இன்றைய சாதகம்
🍁 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍁 இன்றைய நற்சிந்தனை
🍁 உடற்பயிற்சி உடலுக்கு நல்லது. தியானப் பயிற்சி மனதிற்கு நல்லது காயகல்ப பயிற்சி உயிருக்கு நல்லது தற்சோதனை பயிற்சி வாழ்க்கைக்கு நல்லது இந்த நான்கு விதமான பயிற்சிகளும் எவ்வாறு நன்மைகளை தருகிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து தெளிவு பெறுவோம்.
🍁 இன்றைய தற்சோதனை
🍁 எப்படி, எவ்வாறு, எதனால், இன்பமும், துன்பமும் ஏற்படுகிறது. என்பதை தெள்ளத் தெளிவாக மெய்ஞான அனுபவத்தோடும் விஞ்ஞான ஆராய்ச்சியோடும் உணர்ந்து கொள்ள வேண்டும். தற்சோதனைக்கு நமக்குள்ளாக எல்லா வகையிலும் இடம் கொடுத்து தற்சோதனையாகவே நாம் மாறிவிட வேண்டும்.
🍁 இன்றைய பண்புப்பயிற்சி
🍁 சிந்தனையை எப்போதும் விரிவாக்கம் செய்து கொண்டே இருக்கங்கள் ஒருபோதும் நம் சிந்தனைகள் தேக்கமுற்று நின்றுவிடக் கூடாது. சிந்தனையை விரிவாக்கம் செய்யும் பண்பில் சோர்வு ஏற்படாமல் ஆக்கமுடன் ஊக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டே வாழ வேண்டும். வாழ்க வளமுடன்...
🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment