நித்தியக்கடன் நவம்பர் 23 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 23


♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️


🔮 இன்றைய நித்தியக்கடன்


🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔮 இன்றைய சாதகம்


🔮 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🔮 இன்றைய நற்சிந்தனை


🔮 யாருடைய முயற்சி ஆனாலும் அந்த முயற்சிக்கு தகுந்த விளைவு என்பது எப்போதும் எங்கேயும் எக்காலத்திற்கும் ஒரே மாதிரியாக அமையுமா என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு சிந்திப்போமே யானால் இதற்கான பதில் இல்லை என்பதேயாகும் இயற்கையில் அப்படி ஒரு அமைப்பு கிடையவே கிடையாது விளைவுகள் என்பது பல்வேறு காரணங்களால் மாறுபடக் கூடியது ஒரே மாதிரியாக ஒரே செயலாக இருந்தாலும் விளைவு ஒரே மாதிரியாக அமைவதற்கு வாய்ப்பு இல்லை.


🔮 இன்றைய தற்சோதனை


🔮 அச்செயலை செய்கின்ற போதும் காலம் வேறுபடும் கோள்களின் நிலைகள் மாறுபடும் கருவமைப்பு தன்மைகள் தொடர்பு கொள்ளும் நபர்கள் என அனைத்தும் மாறுபடக் கூடிய காரணத்தால் விளைவுகள் எப்போதும் எங்கேயும் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக அமைவதற்கு வாய்ப்பே கிடையாது செயலை முழுமையாக மனநிறைவோடு செய்துவிட்டு அமைதியாக அச் செயலின் விளைவுக்காக காத்திருக்கலாம் அந்த ஒன்றோடு நமக்கான பொறுப்பும் கடமையும் முடிந்துவிடுகிறது.


🔮 இன்றைய பண்புப்பயிற்சி


🔮 தேவையில்லாமல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக காத்திருப்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை விளைவு வரை சென்று மனதை பந்தய குதிரை போல் ஓடச் செய்து கொண்டே இருக்கக் கூடாது திட்டமிட்டு முயற்சி செய்து ஒரு செயலை அமைதியாக செய்துவிட்டு அதிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருந்து பார்க்கப் பழகுங்கள் பண்புகளில் மிக சிறந்த பண்பு இதுவே ஆகும். வாழ்க வளமுடன்...


🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments