நித்தியக்கடன் நவம்பர் 20 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 20


🏮💦🏮💦🏮💦🏮💦🏮💦🏮


🍥 இன்றைய நித்தியக்கடன்


🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍥 இன்றைய சாதகம்


🍥 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🍥 இன்றைய நற்சிந்தனை


🍥 எந்த பொருளோடு எந்த தன்மையோடு நம்மை இணைத்துக் கொள்கிறோமோ நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் எதனோடு இணைகிறது அதனைப் பொறுத்து நம்முடைய தன்மையும் தரமும் மாறுபடும் வேறுபடும் எதை நாம் நினைத்தாலும் நாம் அதுவாகி விடுவோம் என்பதுதான் இயற்கையின் நீதி இதனடிப்படையில் நம்முடைய இந்த பழக்க வழக்கங்களை எதனுடைய அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நமக்கு ஒரு தெளிவான சிந்தனை தேவை


🍥 இன்றைய தற்சோதனை


🍥 சுத்த வெளியோடு பஞ்சபூதங்கள் ஓடும் நவகோள்கள் ஓடும் நம்முடைய நட்பு நிலை ஆழமாகவும் நீண்ட நெடிய தெளிவோடும் அமையும் போதுதான் நம் உடல் செல்களிலும் கரு மையத்திலும் உயிர்துகள்களிலும் இருக்கக்கூடிய களங்கங்கள் எல்லாம் தூய்மை படுத்தப்படுகிறது எண்ணங்கள் ஒழுங்கு அமைக்கப்படுகின்றன இந்த உண்மைகளையெல்லாம் கொஞ்சம் பொறுப்போடும் அக்கறையோடும் நம்மை கவனிக்கும் போதுதான் புரியவரும் ஆதலினால் சுத்த வெளியோடும் இயற்கையின் நிலைகளோடும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.


🍥 இன்றைய பண்புப்பயிற்சி


🍥 நம்முடைய கருமைய தன்மைக்கு தக்கவாறு நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வான விளைவுகள் உருவாகவே செய்யும் மனமார அவைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் உங்களுடைய 30 சதவீத வெற்றி அடுத்த தலைமுறைக்கு வித்தாக அமைந்து அவர்கள் நீங்கள் வழங்கிய 30 சதவீத வெற்றியோடு தன்னுடைய ஆன்மீக வாழ்க்கை பயணத்தை மேலும் மேலும் வெற்றி பெற்று தன்னிலை விளக்கத்தோடு வாழ்வார்கள் வாழ்க வளமுடன்...


🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments