நித்தியக்கடன் நவம்பர் 14 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 14


♻️💥♻️💥♻️💥♻️💥♻️💥♻️


🌌 இன்றைய நித்தியக்கடன்


🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌌 இன்றைய சாதகம்


🌌 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🌌 இன்றைய நற்சிந்தனை


🌌 ஒரு பாத்திரத்தில் உணவை வைத்து அடைத்து விட்டால் நேரம் ஆக ஆக அந்த உணவானது கெட்டுப் போகிறது. நல்ல உணவாக இருந்தபோதும் அதை அடைத்து வைக்கும் போது கெட்டுப் போகிறது. அடைத்து வைக்கக் கூடிய எந்த ஒன்றும் கெட்டு போகும் என்பது இயற்கையினுடைய நீதி. அந்நீதியை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவெனில்...


🌌 இன்றைய தற்சோதனை


🌌 மனதிற்குள் நாம் அடக்கி வைக்கக் கூடிய உணர்வுகள் நாளாக, நாளாக,  உடலையும், மனதையும் பாதிக்கிறது. இந்த பாதிப்பு மன அழுத்தமாக, ஒவ்வாமையாக  உணரப்படுகிறது. இந்த மன அழுத்தத்தை (stress) உருவாக்கிக் கொண்டது யார் என்றால்? நாம்தான் உருவாக்கிக் கொண்டோம். மனம் அமைதியாக இருக்கும் போது இதைப் பற்றி நன்றாக தற்சோதனை செய்து இதனுடைய ஆழ அகலத்தை புரிந்து கொள்ளுங்கள். மனம் ஒரு பாவப்பட்ட நிலையாகும். அதற்கு நம்மை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது. மன அழுத்தத்திற்கு உங்களை நீங்கள் ஆளாகிக் கொள்ளாதீர்கள்.


🌌 இன்றைய பண்புப்பயிற்சி


🌌 பேராசை, சினம், கடும்பற்று,  முறையற்றபால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளை சீரமைத்துக் கொள்ளுங்கள். இவைகள் அதிகரிக்கும் போது  அதுவே மன அழுத்தமாக மாறுகிறது, என்ற உண்மையை உணர்ந்துகொண்டு இவைகளை சமம் செய்து கொள்ளக்கூடிய பண்பில் உயர்வு பெறுங்கள். மனதை லேசாக வைத்துக் கொள்ளும் போது அதுதான் "நோயற்ற வாழ்வாகும் குறைவற்ற செல்வமாகும்" வாழ்க வளமுடன்...


🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments