நித்தியக்கடன் அக்டோபர் 12 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

*அக்டோபர் 12


⭕♾️⭕♾️⭕♾️⭕♾️⭕♾️⭕


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை


🎲 எண்ணமற்ற நிலைக்கு மனதை கொண்டு செல்ல முடியுமா? என்றால் முடியவே முடியாது. தவத்தில் இருந்தாலும் எண்ணங்கள் எழவே செய்யும். ஆனால் உங்களுடைய எண்ணங்களை நல்ல செயல்பாடுகளை நோக்கி திருப்பிக் கொள்ளலாம். உயிரின் அசைவை உயிருடைய தன்மையை, உயிரினுடைய இயக்க நீதியை, இவைகளை ஆராய்ச்சி செய்யும் விதமாக உங்களுடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். எண்ணமற்ற நிலை இல்லவே இல்லை.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 உடலுக்கும், உயிருக்கும் உண்டான நட்பில் இவை இரண்டும் பிரியும் போதுதான் எண்ணமற்ற நிலை என்பது உருவாகிறது. உயிரோடு உடல் இணைந்து இயங்கும் வரை எண்ணம் இருக்கவே செய்யும். குறிப்பு:- மன அலைசுழல் என்பது வேறு, எண்ண ஓட்டம் என்பது வேறு. எண்ணங்களை சீரமைத்து சிறப்பான ஆராய்ச்சிகளாக, மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று தற்சோதனை செய்து விழிப்பு நிலையோடு இதனை சிந்தனை செய்யுங்கள்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் பண்பில் உயர்வதற்காக, நமக்கு கிடைத்த அரியதொரு வாய்ப்பு "குண்டலினி யோகப் பயிற்சி, மனவளக்கலை" இதனைப் பயன்படுத்தி இயல்பான நிலைக்கு உங்களுடைய மனதை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து அதில் வாழும் சிறப்பு நிலைக்கு உயர்வீர்களாக. வாழ்க வளமுடன்... 


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments