நித்தியக்கடன் அக்டோபர் 11 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 11


♨️〽️♨️〽️♨️〽️♨️〽️♨️〽️♨️


🏮 இன்றைய நித்தியக்கடன்


🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏮 இன்றைய சாதகம்


🏮 புதன்கிழமை 

காலை:- ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🏮 இன்றைய நற்சிந்தனை


🏮 சிவப்பு மஞ்சள் பச்சை இந்த வண்ணங்களே சாலையில் நாம் வாகனத்தில் செல்லும்போது நம்மை வழி நடத்தக் கூடியதாகும் இந்த மூன்று வண்ணங்களில் செயல்கள் இதுதான் நிற்கவும் கவனிக்கவும் செல்லவும் இந்த சாலைவிதிகளை மதிக்கும் போது நம்முடைய பயணமானது பாதுகாப்பாக அமையும் மாறாக மதிக்காமல் நம்முடைய எண்ணப்படி சாலைகளில் நடந்து கொண்டால் நமக்கும் பிறருக்கும் பேர் ஆபத்தான விபத்தாக முடிவடைகிறது


🏮 இன்றைய தற்சோதனை


🏮 அகநோக்கு பயணத்திற்கும் இதே விதிமுறை பொருத்தமானதாகவே இருக்கிறது நின்று கவனித்து அதன்பின் செயல்களை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும் ஏனோதானோ என்று நம்முடைய செயல்கள் எப்போதும் எங்கேயும் அமைத்துக் கொள்ளக்கூடாது இது நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஒரு நாளும் ஒரு பொழுதும் நன்மையை தராது நன்றாக தற்சோதனை செய்து இதன் நன்மைகளை உணர முயற்சி செய்வோம்.


🏮 இன்றைய பண்புப்பயிற்சி


🏮 இந்த மனித வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு பல ஜென்ம காலங்களாக நாம் தவறுகளையே செய்து புலன் இன்பங்களுக் குள்ளாகவே நாம் எண்ணியபடி எல்லாம் வாழ்ந்து காலத்தை விறயமாக்கி இருக்கிறோம் இந்த மனிதப் பிறவியானது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தவறுகளை சீர்திருத்தி கொண்டும் புலன் இன்பங்களை கடந்து வாழக்கூடிய வாய்ப்புக்களை பெற்றிருக்கும் பிறவியாகும். இப்பிறவியில் வாழ்க்கையின் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் நின்று கவனித்து திட்டமிட்டுக் கொண்டு செயலாற்ற அறநெறியோடும், உள்ளுணர்வோடும் புறப்படுவோம். வாழ்க வளமுடன்...


🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments