நித்தியக்கடன் செப்டம்பர் 18 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 18


🎲⚙️🎲⚙️🎲⚙️🎲⚙️🎲⚙️🎲


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔰 இன்றைய சாதகம்


🔰 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை


🔰 இறைநிலையின் தன்மாற்றம் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றுக்கும் அதைத் தொடர்ந்து உருவான இன்னொன்றுக்கும் முற்றிலும் வேறுபாடு அதிகம் காணப்படும் உணரப்படும். இவை எல்லாம் அணுஅடுக்குகளின் அமைப்பினாலும், அணுக்களின் கூட்டு இயக்க செயலின் விளைவாக அமைந்தவையாகும். மூலகங்கள் மாறி மாறி இணைப்பு பெற்று தோற்ற பொருள்கள் அனைத்திலும், பல்வேறுவிதமான வியத்தகு செயல்களின் விளைவுகளாக எல்லாம் அமைந்துவிட்டன.


🔰 இன்றைய தற்சோதனை


🔰 இந்த பூமியில் பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று அரவணைத்து ஒருங்கிணைந்து இயங்குவதால் உயிரினங்கள் உருவானது. மற்ற வகை கோள்களில் இந்த பஞ்சபூத கூட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் முறையாக இல்லாத காரணத்தால், அங்கு உயிர்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் ஆயிற்று. இந்த இயற்கையின் அமைப்பை நாம் பாதுகாத்து பயனடைந்து அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பாக வழங்க வேண்டும். பூமியானது சகல ஜீவன்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 இன்று வளர்ந்து தழைத்து நிற்கும் விஞ்ஞானத்தினால், நாம் அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளையும் சிலவற்றை புரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பலவாறான இயக்கங்களை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மறைபொருளாக உள்ள இயக்கங்களையும், செயல்களையும், விளைவுகளையும் மெய்ஞானத்தில் தன்னை ஆழமாக இணைத்துக் கொண்டால் தான், அதற்கான விளக்கங்களை தெளிவாக உள்ளுணர்வாக பெறமுடியும்.

வாழ்க வளமுடன்...


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments