நித்தியக்கடன் செப்டம்பர் 15 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 15


♻️🔶♻️🔶♻️🔶♻️🔶♻️🔶♻️


💢 இன்றைய நித்தியக்கடன்


💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💢 இன்றைய சாதகம்


💢 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


💢 இன்றைய நற்சிந்தனை


💢 நாம் பிறப்பதற்கு எது காரணமாக அமைந்தோ அதுவே தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், இனி நாம் வாழ்வில் நடைபெறப் போகின்ற அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் காரணமாக இருக்கப் போகிறது. இந்த மூல காரணி என்ன என்று தெரிந்து கொள்வோம். நம்முடைய வினைப்பதிவு தான் இந்த அனைத்துக்கும் மூல காரணமாகும். இந்த வினைபதிவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் என்று மூன்று வகையாக பிரித்து வகைப்படுத்தி பேசுவார்கள்.


💢 இன்றைய தற்சோதனை


💢 இன்றைய சூழ்நிலையில் இந்த கர்மவினை பதிவுகளை எண்ணி நாம் பயம் கொள்ள தேவையில்லை. இவைகளையெல்லாம் முறையான பயிற்சி மூலமாக சீர்திருத்தம் செய்து மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அத்தகைய சிறப்புமிக்க பயிற்சி முறையாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய வேதாத்திரியம் இருக்கிறது. எந்தெந்த முறையில் நாம் நம் கர்மவினைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தற்சோதனை செய்து இன்றே, இப்போதே, இக்கணமே துணிந்திடு மனமே.


💢 இன்றைய பண்புப் பயிற்சி


💢 இந்த கர்மவினைகளை சுலபமாக மாற்றியமைத்துவிட முடியும். அதனை சிந்தித்து அந்த சிந்தனை வளத்தில் நாளுக்கு நாள் உயர்வு பெறுவோம். தினந்தோறும் பயிற்சியை செய்யும் பண்பில் உயர்வோம். சொல்லால் மட்டும் நம்பிவிடாமல் சுயமாய் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...


💢 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💢 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments