வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 08
🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱
❄️ இன்றைய நித்தியக்கடன்
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ இன்றைய சாதகம்
❄️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
❄️ இன்றைய நற்சிந்தனை
❄️ இறை உணர்வு பெற வேண்டும் என்ற எண்ணமும், சிந்தனையும் பரவலாக அகத்தவ பயிற்சியில் ஆர்வத்தோடு உள்ள எல்லோரிடத்திலும் காணமுடிகிறது. ஆனால் இறை உணர்வு என்பது செயலுக்குத்தக்க விளைவு. இறைநிலையை உணர்வதற்கான செயல்கள் நம்மிடையே இயல்பாக இருக்குமேயானால், உடல் செல்களும், கருமையமும் தூய்மை பெறப்பெற, இறை உணர்வு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வரும். இதை தடுத்து கொண்டே இருப்பதெல்லாம் நம்முடைய விலங்கின பதிவுகள் மட்டும் தான்.
❄️ இன்றைய தற்சோதனை
❄️ இந்த விலங்கின பதிவுகளில் தூண்டுதலின் பெயரில், நாம் பலவிதமான தவறுகளை செய்து விடுகிறோம். இந்த தவறுகள் மீண்டும் மீண்டும் கருமையத்தில் பதிந்து பழக்கமாகவே அமைந்துவிடுகிறது. இது நமக்குள்ளாக நாமே நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வகையான போராட்டமான நிலை. இதில் நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும். இந்த வெற்றிக்காக தான் நாம் மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
❄️ இன்றைய பண்புப்பயிற்சி
❄️ தனியாக நின்று விலங்கின பதிவுகளோடு போராட தேவையில்லை. நமக்கு பக்கபலமாகவும், உற்ற துணையாகவும், சகலவித பாதுகாப்பாகவும் "அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி" அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த எளிமையான வேதாத்திரியம் இருக்கிறது. வேதாத்திரிய பயிற்சியின் விளைவோடும் முழு மனதோடும் சிந்தனை, சிக்கானம், சீர்திருத்தம் என்ற பண்பில் உயர உயர ஒரு நாள் இறை உணர்வு நமக்கு அனுபவமாக அமைந்தே தீரும் வாழ்க வளமுடன்...
❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment