நித்தியக்கடன் ஜூலை 31 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 31


♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️


🔘 இன்றைய நித்தியக்கடன்


🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔘 இன்றைய சாதகம்


🔘 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

🔘 இன்றைய நற்சிந்தனை


🔘 வேதாத்திரியத்தோடு எந்த அளவு ஆழமாகவும், அகலமாகவும், விரிவாகவும் நீங்கள் இணைகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு ஆற்றலும், அறிவும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும். உங்களுக்கு இப்பயிற்சியால் கிடைக்கப்பெற்ற அனைத்தும் நீங்கள் இந்த சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியதேயாகும்.


🔘 இன்றைய தற்சோதனை


🔘 நீங்கள் பெற்ற அறிவு, திறமை, பொருள், ஆற்றல் அனைத்தும் நீங்கள் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டியது. அவருக்கு கொடுப்பதற்காகவே உங்களுக்கு அன்போடு செயல் விளைவு நீதிப்படி இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது, என்பதை தற்சோதனை செய்து விரிந்த மனதோடு சிந்தித்து இறை ஞானத்தோடு புரிந்து கொள்வீர்களாக.


🔘 இன்றைய பண்புப் பயிற்சி


🔘 உங்களுக்காக வழங்கப்படும் எதையும் மற்றவர்கள் இடைமறித்து தனதாக்கிக் கொள்ள முடியாது. மற்றவர்களுக்காக வழங்க இருப்பதை எதையும், நீங்கள் இடைமறித்து உங்களுடைய தாக்கி கொள்ளவும் முடியாது. இது இயல்பான இறைநீதி ஆகும். அவரவர்களுக்கு விதிக்கப்பட்டது அவரவர்களுக்கு, உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் பண்பில் உயர்ந்து, சிறந்து விளங்குவோம். உண்மையை உணர்ந்து வாழுவோம். வாழ்க வளமுடன்...

 

🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔘 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments