வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 30
📊🍁📊🍁📊🍁📊🍁📊🍁📊
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 "அதுவானால் அதுவே சொல்லும்" நம்முடைய மூலத்தை ஆதியின் துவக்க நிலையை, அடிக்கடி நினைத்து தவம் செய்யும் போதும் சிந்திக்கும் போதும், அதனுடைய தன்மை எல்லாம் நம்முடைய தன்மையாக தன்மாற்றம் பெரும். இது இயற்கையின் நீதி என்ற நீதியை அடிப்படையாகக் கொண்டு பஞ்சபூதங்களை, காந்த நிலைகளை, நவகோள்களை, பேரியக்க மண்டலத்தை, உயிரை, உயிரின் இயக்கத்தை, நம் உடலை, உடலில் நடைபெறக்கூடிய இயக்கங்களை அடிக்கடி நினைக்கும் போது அதுவாகிறோம். அதுவானால் அதுவே சொல்லும்...
🌀 இன்றைய தற்சோதனை
🌀 பஞ்சேந்திரிய தவம், பஞ்சபூத நவக்கிரக தவம், துரியாதீத தவம், நித்யானந்த தவம், ஒன்பது மைய தவம், இறைநிலை தவம் இவை அனைத்தும் அதுவாவதற்காக அதுவாகவே வாழ்ந்து பழகி, அதிலிருந்தே எடுக்கப்பட்ட உண்மையின் அடிப்படையில், ஒட்டுமொத்த இயற்கையின் சாராம்சமாக அனைத்துமாக, வேதாத்திரிய பயிற்சியை தனித்துவத்தோடு உருவாக்கப் பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் நன்றாக ஆய்வு செய்து பாருங்கள். இந்த தற்சோதனை ஒன்றுதான் நம்மை தனித்துவத்தோடு வாழவைக்க வல்லது.
🌀 இன்றைய பண்புப்பயிற்சி
🌀 நாம் அதுவாவதற்கு சில அடிப்படை பண்புகள் தேவை. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற இந்த முறைதவறிய எண்ணங்களை வைத்துக் கொண்டு அதுவாக முடியாது. நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு இவைகள் தான் நம்மை அதுவாக வல்ல பண்புகளாகும். இப்பண்புகளில் நாளுக்கு நாள் சிறந்து ஓங்குவோமாக. வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment