வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 30
🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲
🏮 இன்றைய நித்தியக்கடன்
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏮 இன்றைய சாதகம்
🏮 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🏮 இன்றைய நற்சிந்தனை
🏮 இந்த பூமியில் பருவ காலங்களை சரியாக அமைந்திருப்பதால் தாவரங்கள் வளர்வதற்கும் அதனை தொடர்ந்து உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு அமைகிறது, அதேபோல மனிதர்களுக்குள் பல வகையான திறமைகளும் நுட்பங்களும் சிறப்பு அமைப்புகளும் இருக்கின்றது. இவைகள் முறையான நற்பண்புகள் மூலம் அமைந்து அதன் விளைவாக அணு அடுக்குகள் சீரமைக்கப்பட்டு காந்தப் பினைப்புகளும் உருவாகி மூளை செல்கள் சிறப்பு நிலையை அடைகிறது.
🏮 இன்றைய தற்சோதனை
🏮 நம்முடைய வாழ்க்கையின் பல வகையான திறமைகளும் செயல்களும் அவரவர்களுடைய மூளை இயக்கத்தின் சிறப்பில் தான் அமைகிறது, மூளையுடைய சிறப்பு தன்மையே ஒவ்வொரு மனிதனையும் இந்த பிரபஞ்சத்திற்குள்ளாகவும் தனக்குள்ளாகவும் இருக்கக் கூடிய உண்மைகளை எல்லாம் உணரச் செய்கிறது. இதற்கான பயிற்சி முறைதான் குண்டலினி யோகமாக அமைந்து வேதாத்திரி மகரிஷி அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறது இதனை நன்றாக தற்சோதனை செய்து உள்ளுணர்வாய் உணர்வோமாக.
🏮 இன்றைய பண்புப் பயிற்சி
🏮 பொருள் துறை சார்ந்தவர்கள் அதிகாரத்தால் இந்த உலகில் வாழக்கூடிய மக்கள் வாழ்க்கையில் மயக்க உணர்ச்சிகளும் துன்பங்களும் இன்னல்களும் இடர்பாடுகளும் உருவாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது இவைகளில் இருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனையில் இணைத்து தனக்கான தேவைகளை முறைப்படுத்தி உயிருக்கு உகந்த செயல் பண்பில் நாம் அனைவரும் உயர்வோமாக. வாழ்க வளமுடன்...
🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🏮 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment