வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 28
♻️♨️♻️♨️♻️♨️♻️♨️♻️♨️♻️
🎲 இன்றைய நித்தியக்கடன்
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 இன்றைய சாதகம்
🎲 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🎲 இன்றைய நற்சிந்தனை
🎲 மனிதர்களுடைய பலம் பலவீனம் இரண்டுமே நம்முடைய மனம் தான். மனதின் துணை கொண்டே நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தை தீர்மானிக்கிறோம். அதே மனம் தான் நம்முடைய பயணத்திற்கு உந்துதலாகவும் எல்லா வகையிலும் உதவியாகவும் இருக்கிறது. இதில் நன்மை தரத்தக்க திருப்புமுனைகள் பயணங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அதுவே தீமை தரத்தக்க திருப்புமுனைகள் அமைந்து விட்டால் வாழ்க்கையை அதலபாதாளத்தில் தள்ளி விடுகிறது.
🎲 இன்றைய தற்சோதனை
🎲 பல விதமான திருப்பங்களை அடிப்படையாகக் கொண்டதே மனித வாழ்க்கையாகும். இவற்றை நாம் தேர்வு செய்ய முடியும். நாம் அறிவின் துணைகொண்டு மனதை இயக்கி பழகியிருந்தால், பெரும்பாலும் எதிர்காலத்தை அச்சமின்றி அமைத்துக் கொள்ள நம்மால் முடியும். புலன் இயக்க மயக்கத்திலிருந்து மனதை அறிவின் பாதையில் மெதுவாக உயர்த்தி கொள்ளலாம்.
🎲 இன்றைய பண்புப்பயிற்சி
🎲 மனம் போன போக்கில் போகாமல், மனதை நிறுத்தி நிதானமாக அறிவின் கட்டுப்பாட்டில் இயக்கி பழக்க நாம் பயிற்சி செய்து. தான், தனது என்ற பொருள் பற்றையும், அதிகாரத்தையும் தளர்த்திக் கொண்டு. தற்சோதனையில் தன்னை உயர்ந்த நிலைக்கு நகர்த்தி அங்கே நிலைத்து வாழ, இங்கு அறிவும் மனமும் ஒன்றாக நிற்கும். இந்த நிலைதான் "அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவின் முழுமை அது முக்தி". மகரிஷி கவியில் விளக்கி உள்ளார்கள் வாழ்க வையகம் வளர்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்...
🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment