நித்தியக்கடன் ஜூலை 28 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 28


♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️


🌌 இன்றைய நித்தியக்கடன்


🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌌 இன்றைய சாதகம்


🌌 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.

 

🌌 இன்றைய நற்சிந்தனை


🌌 எதுவெல்லாம் என்னோடு இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், இதுவெல்லாம் என் வாழ்க்கையில் இல்லாமல் இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், இப்படி நீங்கள் சிந்திக்கும் போது நீங்கள் உங்களை தவறாக வழி நடத்துகிரீர்கள் என்று பொருள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். இந்த உண்மை கொஞ்சம் கசக்கத்தான் செய்யும் இருப்பினும் இது தான் நிஜம்.


🌌 இன்றைய தற்சோதனை


🌌 விருப்பமும், வெறுப்பும் உங்களிடம் இருக்கும் எனில், நீங்கள் இயற்கையின் சட்டத்தை இறை நீதியை புரிந்து கொள்ளவும் இல்லை உணர்ந்து கொள்ளவும் இல்லை என்றே பொருள். இயற்கையின் சட்டத்தில் இறை நீதியில் விருப்பு வெறுப்பு கிடையாது. விருப்பு வெறுப்புகள் இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு அமைதியும் மன நிறைவும் சொந்தமாகும். நன்றாக தற்சோதனை செய்து விருப்பு வெறுப்புகளில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.


🌌 இன்றைய பண்புப் பயிற்சி


🌌 எல்லாவற்றையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்த பண்பு தான் உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடியது. உங்களுடைய தன்மையை, தகுதியை உயர்த்தும் பண்பாகும். இப் பணியில் உயர்வதற்காகவே இந்த மனித உருவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்ற உண்மையை மறவாதீர்கள். விருப்பு வெறுப்பு இல்லாமல் பூரண மன அமைதியோடும் மனோ சக்தியோடும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌌 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments