வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 25
♦️🍀♦️🍀♦️🍀♦️🍀♦️🍀♦️
🌍 இன்றைய நித்தியக்கடன்
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌍 இன்றைய சாதகம்
🌍 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🌍 இன்றைய நற்சிந்தனை
🌍 பூமியின் தரை மட்டத்திலிருந்து மேலே சென்ற எந்த பொருளாக இருந்தாலும் அது மீண்டும் தரைமட்டத்திற்கு வந்துதான் ஆகவேண்டும். காற்றழுத்த மண்டலத்தை தாண்டி செல்லும் பொருள் வான்மண்டலத்தில் மிதக்கத் துவங்கி விடும். அதே போல் நீருக்குள் எந்த ஒரு பொருளின் எடையையும் காண முடியாது. அதே பொருள் நீருக்கு வெளியே எடையை காட்டும். ஒரே பொருள் இடத்திற்குத் தக்கவாறு நிலை மாற்றம் பெறுகிறது.
🌍 இன்றைய தற்சோதனை
🌍 நம்முடைய உடலும் மனமும் இதேபோல்தான். அவை இணைந்து இயங்கும் இடத்துக்கும் பொருளுக்கும் தக்கவாறு தன்னுடைய நிலையை மாற்றி அமைத்துக் கொள்கிறது. இவ்வாறாக இருக்கும் இயற்கையினுடைய இயக்க நீதியை உணர்வோம். மனதை எதனோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலுக்கு எது சிறந்த உகந்த உணவு என்று தெளிவோடு உணவையும், உணவோடு கொள்ளும் உறவையும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக தற்சோதனை செய்து இதனுடைய விளைவுகள் நம் வாழ்க்கைக்கு எவ்வாறெல்லாம் மென்மையை தருகிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வோம்.
🌍 இன்றைய பண்புப் பயிற்சி
🌍 எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய மெய்ஞான உண்மையை உணர்வதற்கான பண்பில் உயரவேண்டும். எப்போதும் நம்மை விழிப்பு நிலையில் வைத்துக் கொண்டு தற்சோதனையோடு இருக்கும் போதுதான், இந்த மெய்ஞான உண்மைகள் நம்முடைய மனதிலும் அறிவிலும் வளர்ச்சி பெறும். அது வளர்வதற்குரிய பண்பில் ஒவ்வொரு நாளும் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌍 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌍 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment