வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 24
🍥🎱🍥🎱🍥🎱🍥🎱🍥🎱🍥
🏮 இன்றைய நித்தியக்கடன்
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏮 இன்றைய சாதகம்
🏮 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🏮 இன்றைய நற்சிந்தனை
🏮 அண்ட வெளியில் இந்த பூமி மிதந்து, உருண்டு, சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதங்களும் இந்த பூமியில் சரியான விகிதாச்சாரத்தில் ஒன்றை ஒன்று அரவணைத்து கொண்டு இயங்குகிறது. இந்த பூமியானது இதில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான, உணவை வழங்கியும் அனைத்து உயிர்களுக்கும் வசிப்பிடமாகவும் இருக்கிறது. இந்த பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
🏮 இன்றைய தற்சோதனை
🏮 இயற்கையின் அற்புதமான தன்மாற்றம் இந்த பூமி. இதில் இருக்கக்கூடிய வளங்களை முறைதவறி மனிதர்கள் பயன்படுத்தி, பெரும் பாதிப்புக்கு இந்த பூமியை உள்ளாக்கி கொண்டிருக்கிறோம். இவைகளை குறைத்துக் கொள்ளாமல் இதே நிலை நீடித்தால் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குள்ளாக, இந்த பூமியை நாம் இழந்துவிடுவோம். நம்முடைய ஒட்டுமொத்த தவறுதான் இன்று கட்டுப் படுத்த முடியாத உயிர் கொல்லியாக நம் முன் நின்று கொண்டிருக்கிறது, என்ற உண்மையை உணர்வோம்.
🏮 இன்றைய பண்புப்பயிற்சி
🏮 தேவைகள், பழக்கவழக்கங்கள், எதிர்பார்ப்புகள் இதையெல்லாம் எல்லா மனிதர்களும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கையை மதித்து வாழக்கூடிய முறையான வாழ்க்கையை தானும் வாழ்ந்து, தன்னுடைய அடுத்த சந்ததியர்களுக்கும் அதில் வாழ பழக்கி, மனிதர்கள் மனிதர்களுக்கும் பூமிக்கும் தொண்டு செய்ய வேண்டும். நம்மை ஒழுங்கமைத்து கொள்வது நமக்கும் நல்லது, உலகுக்கும் நல்லது. மனவளக்கலை பயிற்சிகள் நம்மை ஒழுங்குபடுத்தும், பக்குவப்படுத்தும் பயிற்சியை செய்வோம் பயனுற வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment