நித்தியக்கடன் ஆகஸ்ட் 14 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 14


👣🌀👣🌀👣🌀👣🌀👣🌀👣


🌿 இன்றைய நித்தியக்கடன்


🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌿 இன்றைய சாதகம்


🌿 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


வேதாத்திரி மகரிஷியின் 113 வது ஜெயந்தி தின வாழ்த்துக்கள் 

 

🌿 இன்றைய நற்சிந்தனை


🌿 உங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நிலைப்பாடு தான் உங்களுடைய வாழ்க்கையின் பின் புலத்திலிருந்து செயல்படப்போகிறது. கருமையத்திலிருந்து எழும் பதிவுகளின் எழுச்சியில் உங்களுடைய நிலைப்பாடு அமைகிறது. மாற்றிப் புரிந்து கொண்டு உங்களின் மதிப்பை இழந்து விடாதீர்கள் யாருக்காகவும், எதற்காகவும்.


🌿 இன்றைய தற்சோதனை


🌿 ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து சிந்தித்து அதில் தெளிவு பெற வேண்டியது, மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய கடமையாகும். இந்தக் கடமையில் எவரெல்லாம் எப்போதெல்லாம் தவறுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். தற்சோதனையில் உங்களை விருப்பத்தோடு இணைத்துக் கொள்ளுங்கள்.


🌿 இன்றைய பண்புப் பயிற்சி


🌿 எண்ணத்தை ஆராயக்கூடிய பண்பில் அனைவரும் சிறந்து விளங்கவேண்டும்‌. மிகச்சிறந்த மனித பிறப்பின் அடித்தளமாக இருக்க கூடிய தன்மை ஞானமாகும். இந்த ஞான தன்மையை மேல் நிலைக்கு கொண்டுவர எண்ணம் ஆராய்தல் என்னும் பண்பு எல்லோருக்கும் அவசியம். எப்போதுமே ஆராய்ச்சியில் இருங்கள். இந்தப் பண்பே நாளடைவில் ஞானத்தை நோக்கிய நகர்வுக்கு முக்கிய காரணமாக அமையும்.

 

🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments