வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 09
☘️♨️☘️♨️☘️♨️☘️♨️☘️♨️☘️
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 இந்த பூமியில் எந்த ஒரு உயிர் வகையானாலும் காந்தம் ஊடுருவி, அவைஅவைகளுக்குள் அவைஅவைகளின் எண்ணமாகவும் சிந்தனையாகவும் பிரதிபலிக்கும். இது காந்தத்தின் வழியாக நடைபெறக்கூடிய மிக சிறப்பான இயக்கமாகும். எந்த ஒன்றை நாம் நினைத்துக் கொண்டே இருந்தாலும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் நாம் அதுவாக மாறிவிடுவோம், என்ற இறை இயக்க நீதியின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாகும்.
🍥 இன்றைய தற்சோதனை
🍥 இது மாதிரியான நிகழ்வுகள் காந்தத்தில் பல உள்ளன. அவைகளை எல்லாம் தவத்தின் போது உயிருக்குள் ஒடுங்கி ஆழ்ந்து, மன அலைச்சுழலை குறைத்துக்கொண்டு சிந்தித்து உணர வேண்டும். இந்த சிந்தனையின் உயர்வில் உச்சகட்டமாக நம்முடைய மனதை பற்றியும், உயிரைப் பற்றியும், நமக்குள் இருக்கக்கூடிய இறை தன்மை பற்றியும் பல்வேறு வகையான உண்மைகளை அனுபவமாக பெறுவோம்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 இந்த அனுபவ உண்மைகளை எல்லாம் உணரும் போதுதான் அவைகளை உளமார நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் மேலும் வாழ்க்கை என்பது எதார்த்தமாகும். வாழ்க்கையை இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு உகந்த செயல் பண்புகளை அவ்வப்போது நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு வழித்தடமாக நமக்கு கிடைத்திருப்பது தான் வேதாத்திரியம். வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment