நித்தியக்கடன் ஆகஸ்ட் 07 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 07


🎲🌍🎲🌍🎲🌍🎲🌍🎲🌍🎲


💯 இன்றைய நித்தியக்கடன்


💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💯 இன்றைய சாதகம்


💯 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

💯 இன்றைய நற்சிந்தனை


💯 கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவரவர்களுடைய கருமையத்தின் தன்மைக்கு தக்கவாறு அவைகள் ஒவ்வொரு ஜீவனுக்கும் மாறுபட்ட விளைவுகளை தருகின்றன. கோள்களின் காந்த அலைகளுக்கு நன்மை-தீமை என்பதெல்லாம் கிடையாது. அவைகள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் பொதுவானவை.


💯 இன்றைய தற்சோதனை


💯 நம் உடலிலுள்ள ஏழு தாதுக்களும் ஒவ்வொரு கோள்களோடு நேரடியாக தொடர்புடையவை. சந்திரனின் காந்த அலை கதிர்கள் நம் ரத்தத்தோடு தொடர்புடையது. ஆனால் இவை ரத்தத்தில் நேரடியாக கலந்து விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. மாறாக அக்காந்த அலை கதிர்கள் நம் கருமையத்திற்கு சென்று, நம் கருமைய தன்மைக்குத் தக்கவாறு தன் மாற்றம் பெற்று, அதன் பின்னரே உடலில் உள்ள ரத்தத்தோடு இணைகின்றது.


💯 இன்றைய பண்புப்பயிற்சி


💯 நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திர கூட்டம் என்று மகரிஷி அவர்கள் தெளிவாக இதனை விளக்கி இருக்கிறார்கள். கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நமக்கு நன்மையே தான் செய்து கொண்டிருக்கிறது. நம் கருமைய தன்மைக்கு ஏற்றவாறு இவைகள் நமக்கு விளைவுகளாக அமைகின்றன. இதனை தெளிவாக உணர்ந்து கொண்டு நம் கருமையத்தை தூய்மை செய்து கொள்வோமாக... வாழ்க வளமுடன்...

 

💯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments