நித்தியக்கடன் ஜூன் 29 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 29


❄️🕳️❄️🕳️❄️🕳️❄️🕳️❄️🕳️❄️


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.

 

♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ நீங்கள் வாழ வேண்டும் என்று நினைத்த வாழ்க்கை வேறாகவும், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை வேறாகவும் இருக்கிறதா? ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இது மாதிரியான சிந்தனைகளும் எண்ண ஓட்டங்களும் இருக்கவே செய்யும். எதார்த்தமான உண்மை என்னவெனில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைதான் நம்முடையதாகும். எதார்த்தமாக சிந்தனை செய்து பாருங்கள்... உங்களுடைய கனவில் இருந்து கொஞ்சம் வெளியே வாருங்கள்...


♻️ இன்றைய தற்சோதனை


♻️ தினந்தோறும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை தவறாமல் மேற்கொண்டு வாரம் ஒருநாள் மௌனத்தில் இருந்து, தற்போது நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடியுமென்றால் அது யதார்த்த வாழ்க்கைக்கு பொருத்தமானதாக இருக்குமென்றால், தாராளமாக திட்டமிட்டுக் கொண்டு முயற்சி செய்யுங்கள். மேலும் தற்போதுள்ள சூழ்நிலை இதற்கு பொருந்தாது என்றாலும், அல்லது அதை உங்களால் நிறைவேற்ற முடியாது என்றாலும் அதற்கென சமுதாயத்திலிருந்தோ, உங்கள் குடும்பத்திலிருந்தோ ஒருவரை உருவாக்குங்கள்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ அதே நேரம் இதை நாம் மறந்து விடவும் கூடாது. நம்முடைய ஆசையை எண்ணத்தை அடுத்தவர் மீது திணிக்கப்பட்டதாக ஒருபோதும் அந்த வரலாறு உருவாக்கி விடக்கூடாது. மாறாக அவர்கள் உள்ளத்தில் இருந்து எழுந்த உந்துதலோடு இந்த எண்ணத்தை சமுதாய நலனுக்காகவும், அவருடைய வாழ்வியல் கடமையாகவும் உணர்ந்து ஏற்றுக்கொண்டு செயல் புரிந்ததாக இருக்க வேண்டும். மேலும் அவருக்கென்று அறிவும், சிந்தனையும், திறமையும் இருக்கிறது. இறைநிலை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக இப்பூமியில் உருவாக்குகிறது. அவரவர் வாழ்வில் அவரவர் கடமையில் அவரவர்கள் நிறைவாக வாழ்வோம். வாழ்க வளமுடன்...

 

♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments