வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 26
🌾🍥🌾🍥🌾🍥🌾🍥🌾🍥🌾
♨️ இன்றைய நித்தியக்கடன்
♨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♨️ இன்றைய சாதகம்
♨️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
♨️ இன்றைய நற்சிந்தனை
♨️ புலன்கள் வழியாக அதிவேக நிலையில் இயங்கி ஓடிக் கொண்டே இருக்கும் காந்தத்தை மனதை கொண்டு அமைதியான வழியை நோக்கி ஒழுங்கமைக்கக் கூடிய பயிற்சி முறைதான் ஆன்மிகமாகும், யோக சாதனனயாகும். இதற்கு தன்னை தானே யாரெல்லாம் தயார்படுத்திக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு இந்த பயிற்சியின் முழு பலனும் அனுபவமாகிறது.
♨️ இன்றைய தற்சோதனை
♨️ முழுமையாக ஒன்றை நம்பி அதனிடம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால் மட்டும் தான் அதற்கும் நமக்குமான நட்பு, இணக்கத்தன்மை, புரிதல் சிறப்பான முறையில் மேலோங்கும் வளர்ச்சி அடையும். கண்மூடித்தனமான நம்பிக்கை கூடாது. அறிவுக் கண்ணை திறந்து கொண்டு எந்த ஒன்றையும் ஆய்வு செய்து (தற்சோதனை) அந்த ஆய்வுகளுக்கு பின்னால் கிடைத்த தெளிந்த அறிவின் கீழ் நம்மை பொருத்திக் கொள்ள வேண்டும். நம்மை சீரமைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
♨️ இன்றைய பண்புப் பயிற்சி
♨️ சூழ்நிலைகள் நம்மை எப்போதும் திசை திருப்ப பலமாக முயற்சி செய்யும். அவைகளை எல்லாம் தாண்டி தான் நம்மை முழுமையான அறிவில் இணைத்துக் கொண்டு அதனுடைய சிறப்பு நிலைபாடுகளில் வாழ வேண்டும். விடாமுயற்சியோடு வாழக்கூடிய பண்பு தான் அந்த நிலைக்கு நம்மை உயர்த்தும். தெளிவான முடிவோடு விடாமுயற்சி செய்து நம்மோடு நாம் இணைவோம். வாழ்க வளமுடன்...
♨️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♨️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♨️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment