வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 21
♦️🌌♦️🌌♦️🌌♦️🌌♦️🌌♦️
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 காற்று, மழை, வெப்பம் என பூமியின் அனைத்து வளங்களும் பொதுவாகவே இருக்கிறது. தனக்கென்று எதையும் இருப்பு கட்டாமல் தன்னிடத்திலே உருவாக்கக்கூடிய, அனைத்தையும் உலக உயிர்களோடு பகிர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுதான் மனிதர்களிடத்தில் அன்பாகவும், கருணையாகவும் வெளிப்படுகிறது. இந்த உணர்வை யாரெல்லாம் உணராமல் இருக்கிறார்களோ, அல்லது இந்த உணர்வில் யாரெல்லாம் வாழ மறுக்கிறார்களோ, அவர்களெல்லாம் இயற்கைக்கு நேர் எதிராகவும், தனக்கும் துரோகம் செய்து கொள்கிறார்கள் என்பதே உண்மை.
💠 இன்றைய தற்சோதனை
💠 உங்களுக்குள் இல்லாத ஒரு உணர்வை உங்களால் மற்றவர்களோடு நிச்சயமாக பகிர்ந்து கொள்ள முடியாது. உங்களை நீங்கள் அன்போடும், கருணையோடும் நடத்த முடியாத போது உங்களால் மற்றவர்கள் மீது அன்போடும், கருணையோடும் இருக்க முடிவது என்பது இயலாத ஒன்று. இந்த உண்மையை பலவகையிலும் தற்சோதனை செய்து அன்போடும், கருணையோடும் வாழ சிந்தனை செய்து சீர்திருத்தத்தோடு உயர்வு பெருங்கள்.
💠 இன்றைய பண்புப் பயிற்சி
💠 நம்முடைய உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் இணக்கமான தன்மை இருந்தால் மட்டும்தான் மற்றவர்களோடு, எல்லா வகையிலும் இணக்கமாக நம்மால் வாழ முடியும். இந்த அகன்று விரிந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு சின்ன நிகழ்ச்சியாவோம். இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு நமக்கு உள்ளும், புறமும் அன்பையும், கருணையையும் அடிப்படை பண்பாக கொண்டு வாழ்வோம். பிரபஞ்சத்தில் உள்ள அன்பையும், கருணையையும் உணர்வோம். வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
💠 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment