வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 20
💯❄️💯❄️💯❄️💯❄️💯❄️💯
🌞 இன்றைய நித்தியக்கடன்
🌞 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌞 இன்றைய சாதகம்
🌞 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌞 இன்றைய நற்சிந்தனை
🌞 நம் மனதிற்கு இயல்பாகவே இருக்கக் கூடிய சக்தியை, நாம் பயிற்சி மூலமாக மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதை நினைத்தாலும் மனம் அது ஆகிவிடும். மனதை எவ்வளவு நுட்பமாகவும், எவ்வளவு விரிவாக வேண்டுமானாலும் எதனோடும் இணைத்து அதைப்பற்றி உள்ளுணர்வாக உணரமுடியும். மனமே காந்த சக்தியாக இருப்பதால் மனதை எங்கு செலுத்துகிறோமோ அங்கு காந்தம் குவியும்.
🌞 இன்றைய தற்சோதனை
🌞 மனதை நன்றாக விரிவடைய செய்து கொண்டு எதனோடும் நினைத்த மாத்திரத்தில் இணைந்து கொள்ளக் கூடிய, அளவிற்கு நாம் பலமாக முயற்சி செய்ய வேண்டும். இந்த பயிற்சியை முதலில் உடலுக்குள் இருந்து ஒவ்வொரு மையங்களிலும் நிறுத்தி அதனோடு இணைத்து இயக்கி பழக வேண்டும். ஏழுதாதுக்களோடு இணைந்து அவைகளை இயக்கி பழக வேண்டும். பஞ்ச பூதங்களோடு இணைந்து பழகவேண்டும். பிரபஞ்ச நிலைகள் அனைத்தோடும் இணைந்து இயங்க வேண்டும். எல்லா நிலைகளோடும் இணைந்து, எல்லா வகையிலும் நிலைத்து இயங்கும் அளவிற்கு தற்சோதனை செய்வோம், விடாமுயற்சி செய்வோம்.
🌞 இன்றைய பண்புப் பயிற்சி
🌞 தான், தனது என்ற பொருள் பற்றிலும், அதிகாரப் பற்றிலுமிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளாதவரை. உங்களுக்குள் உங்களால் இணைய முடியாது. தான், தனது என்ற நிலைகளை கடந்து மனதால் உயர்ந்து நில்லுங்கள். இந்தப் பண்பே உங்களை எல்லாவற்றோடும் இணைக்கும் பண்பாகும். "நிலை பல கடந்து நிலைத்த நீடித்த வாழ்வை முழுமையாக வாழ்வோம்" வாழ்க வளமுடன்...
🌞 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌞 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌞 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment