வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 14
❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️♻️❄️
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 நாம் நம்புகின்ற ஒன்றை, ஏற்றுக்கொண்ட ஒன்றை, நம்மோடு பழகிவிட்ட ஒன்றை, நம்மிடமிருந்து விலக்கி வைப்பது என்பதும், நம்மிடமிருந்து பிரித்து விடுவது என்பதும் மிகவும் கடினம். நம்முடைய பழக்க வழக்கம் நன்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த தவறும் இல்லை. அதே பழக்க வழக்கம் தவறான விளைவைத் தரும் என்றால் அங்கே தான் பிரச்சனை, சிக்கல் துவங்குகிறது.
🔥 இன்றைய தற்சோதனை
🔥 மனிதர்கள் பழக்கத்துக்கு அடிமை. இந்த பழக்கங்களை நல்ல விதத்தில், நல்ல விளைவைத் தரும் வகையில், அமைத்துக் கொள்ள வேண்டியது அவரவர்களுடைய பொறுப்பும், கடமையுமாகும். உங்களோடு பிறந்து உங்களோடே வளர்ந்துவிட்ட ஒன்றை மாற்றி சிந்திக்கவும், சீர்திருத்தம் செய்து கொள்ளவும் உளப்பயிற்சி அவசியமாகிறது. தன்னைத்தானே எவரொருவர் தற்சோதனைகுள் ஆட்படுத்திக் கொள்கிறாரோ அவருக்கு மட்டுமே இதில் வெற்றி காண்பது எளிதான காரியமாகும்.
🔥 இன்றைய பண்புப் பயிற்சி
🔥 "பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கை" எனப்படுகிறது. மனதால் உணரப்பட்டு, மனதால் அறியப்பட்டு அறிவுபூர்வமாக வாழவேண்டும். இது இப்படித்தான் என்று தீர்மானித்துக் கொண்டு அதன் கீழ் நம்முடைய எண்ணம், சொல், செயல் இவைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பண்பில் உயர்வு காணும்போது "பிறவியின் நோக்கமும் வாழ்வின் நோக்கமும்" நிறைவு பெறுகிறது. வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🔥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment