வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 12
☘️🎭☘️🎭☘️🎭☘️🎭☘️🎭☘️
🌀 இன்றைய நித்தியக்கடன்
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 இன்றைய சாதகம்
🌀 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌀 இன்றைய நற்சிந்தனை
🌀 ஒரு ஐஸ் கட்டியை வெப்பத்தை கொண்டும் கரைக்கலாம், நீரைக் கொண்டும் கரைக்கலாம், திட நிலையில் இருக்கும் பொருளை திரவ நிலைக்கு மாற்ற பல வழிகள் இருக்கின்றன.இதில் எது சிறந்ததோ, உகந்ததோ, அக்காலத்திற்கு பொருத்தமானதோ அதனை கடைபிடித்து, நாம் இந்த செயலை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
🌀 இன்றைய தற்சோதனை
🌀 இவ்வாறு இறுகிய நிலையில் இருக்கும் மனதை தளர்த்தவும், பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனைத்தான் "வேதாத்திரி மகரிஷி" உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனையை பயிற்சியாக கொடுத்திருக்கிறார்கள். இந்த நான்கு விதமான பயிற்சிகளும் மனத்தளர்வுக்கான பயிற்சிகளே ஆகும். இதனை சிறப்பான முறையில் சிந்தனை செய்து தற்சோதனையில் நம்மை ஆழ்த்திக் கொண்டு அறிவை விரிவாக்கம் செய்து கொள்வோம்.
🌀 இன்றைய பண்புப் பயிற்சி
🌀 முதலில் நம்முடைய மனம் திடமான நிலையில்தான் இருக்கிறது, என்பதை உணர்ந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை திரவ நிலைக்கு மாற்ற கூடிய வழிமுறைகள் நம் அறிவில் உதயமாகும். பதம் அடைந்து, பண்பில் உயர்ந்து, இறைநிலையில் கரைந்து நம்முடைய அடையாளங்களை மீண்டும் நமதாக்கிக் கொண்டு நம்மோடு நாம் வாழும் நிலைக்கு உயர வேண்டும். பண்பான எண்ணம், சொல், செயல்களை கொண்டு மட்டும் தான் இதனை சாதித்துக் கொள்ள முடியும். வாழ்க வளமுடன்...
🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌀 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment