நித்தியக்கடன் ஜூலை 10 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 10


🌞🔘🌞🔘🌞🔘🌞🔘🌞🔘🌞


💯 இன்றைய நித்தியக்கடன்


💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💯 இன்றைய சாதகம்


💯 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.

 

💯 இன்றைய நற்சிந்தனை


💯 சிறுதுளியே பெருவெள்ளம் என்ற வார்த்தைக்கு ஏற்ப, நம்முடைய செயல்கள் வழியாக நல்வினை பதிவுகள் நம் கருமையத்தில் அதிகரிக்கும். அதேசமயம் புற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பவும் நம்முடைய அகத்தின் உணர்வுகளில் பல்வேறுவிதமான வேறுபாடுகள் உருவாகும். புறத்திலிருந்து நாம் சில பல நிகழ்ச்சிகளால் தூண்டப்படும் போது கவனமாக இருக்க வேண்டும்.


💯 இன்றைய தற்சோதனை


💯 வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் பல சந்தர்ப்பங்களை நாம் கடந்து சென்றுவிடவேண்டும். நமக்கு அமையக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனைத்திலும் நம்முடைய பங்களிப்பை செலுத்தி கொண்டு இருக்க கூடாது. நல்ல விளைவுகளைத் தரக்கூடிய சூழ்நிலைகளாக இருந்தால் அவைகளுக்கு தாராளமாக செயல்வடிவம் கொடுக்கலாம். தற்சோதனை செய்து அவைகளை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.


💯 இன்றைய பண்புப்பயிற்சி


💯 நமக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும் பொருத்தமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகளையும் செயல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை மதிப்போடு நாம் வாழவேண்டும். நம்மை நாம் மதிக்கும் போது தான் நம்முடைய கருமையமும் கர்ம வினைகளும் தூய்மை பெறும். வாழ்க வளமுடன்...

 

💯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


💯 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments