நித்தியக்கடன் ஜூலை 09 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 09


🍁💦🍁💦🍁💦🍁💦🍁💦🍁


🌍 இன்றைய நித்தியக்கடன்


🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌍 இன்றைய சாதகம்


🌍 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

🌍 இன்றைய நற்சிந்தனை


🌍 மனிதர்களாக பிறந்து இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு அம்சம் இருக்கிறது எந்த ஒரு மனிதனுக்கும் இந்த சிறப்புத் தன்மை இல்லாமல் போகாது அப்படிப்பட்ட தனிச்சிறப்பு மனிதர்களுக்கு எப்படி அமைகிறது என்றால் அவரவர்களுடைய உருவ அமைப்புக்கும், கருவமைப்பிற்கும் தகுந்தார் போல இந்த சிறப்பு அமைப்பு  உருவாக்கப்பட்டிருக்கிறது‌.


🌍 இன்றைய தற்சோதனை


🌍 ஆனால் இந்த சிறப்பு மனிதனுக்கும், மனிதனுக்குமான போராட்டத்தில் இவர்களுக்கு இடையே ஏற்படும் போட்டி, பொறாமை, வஞ்சம், பகை இவற்றால் நிலை குலைகிறது, அவர்களுடைய சிறப்பு மழுங்கடிக்கப்படுகிறது. அமைதியாக தற்சோதனை செய்து இந்த முரண்பாடுகளை சமம் செய்து கொள்ள வேண்டும். இந்த முரண்பாட்டை வைத்துக்கொண்டு அமைதியாகவும், நிறைவாகவும் வாழமுடியாது.


🌍 இன்றைய பண்புப் பயிற்சி


🌍 எனக்கு உள்ளும், புறமும் இருக்கும் என்னுடைய வாழ்வாதாரத்தை நான்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சமுதாயத்தின் மீதோ, மற்றவர்கள் மீதோ குற்றம் சொல்லி, குறை சொல்லி யாதொரு பயனும் இல்லை. என்னில் இருக்கும் என்னை உயர்ந்த, சிறந்த நிலையோடு இணைத்து வாழும் பண்பில் உயர்வு பெற வேண்டும். என்ற சிந்தனை எல்லோரிடத்திலும் உயிர்பெறட்டும். வாழ்க வளமுடன்...

 

🌍 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌍 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌍 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments