வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 16
👣💠👣💠👣💠👣💠👣💠👣
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ மனிதனுடைய அறிவு புது புது விஷயங்களில் தன்னை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டு உயர்வு பெறுவதற்காகவே உருவானதாகும். இந்த அறிவினுடைய முழுமையையும், மகத்துவத்தையும் உங்களுக்குள் நீங்களாக பயணித்து அதனுடைய திறமைகளை அதன் தன்மைகளை அடையாளம் கண்டு கொள்ளும் போது, உங்களையும் தாண்டி அது தன்னை தானே உங்களுக்கு அறிமுகம் செய்து கொள்கிறது. இந்த நிலைப்பாடு நமக்குள் அமைய வேண்டுமானால் நாம் எதார்த்தமாக அனைத்தையும் சிந்தித்து புரிந்து கொண்டு அதன் வழி வாழ வேண்டும்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ அறிவினுடைய முழுமையையும் அதனுடைய பல்வேறுபட்ட நிலைபாட்டையும் எவரொருவர் உணருகிறாரோ அவரே ஞானி என்று பேசப்படுகிறார். இந்த ஞானம் என்பது எளிமையின் அடையாளமாகவும் எளிமையை தனக்குள் உணர்ந்ததால் வெளிப்பட்ட நிலையாகும். இது தன்னை தானே தகவமைத்துக் கொண்டு தன்னை ஒருநிலை பாட்டுக்குள் நிலைநிறுத்தும் ஒவ்வொரு மனிதர்களிடத்திலேயும் அபரிமிதமாக வளர்ச்சி பெறுகிறது. இந்த உண்மையை தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.
♻️ இன்றைய பண்புப் பயிற்சி
♻️ எப்போது நாம் நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றோமோ அப்போது நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ளாமல், பிறரையும் துன்பப் படுத்தாமல் வாழ்வதற்கு சிந்திக்கின்றோம். இந்த சிந்தனையே நம்மை சீரான ஞான நிலையை நோக்கி நகர்த்துகிறது. எல்லாவற்றிலும் அன்பை காணுதல், அன்பை செலுத்துதல், அன்பாகவே வாழுதல் இந்த அன்பு என்பது இறைவனின் அம்சமாகவே இருக்கிறது. இதுவே ஞானத்தின் அடித்தளமாகும். அன்பு எனும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
♻️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment