வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 12
🔘♨️🔘♨️🔘♨️🔘♨️🔘♨️🔘
🕸️ இன்றைய நித்தியக்கடன்
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ இன்றைய சாதகம்
🕸️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🕸️ இன்றைய நற்சிந்தனை
🕸️ பூமியின் மேற்பரப்பில் உள்ள விதைகளையும், பூமியின் அடிப்பரப்பில் உள்ள கனிமவளங்களையும் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் நகர்த்துகிறது. புயலையும், தென்றலையும், மழையையும், வெள்ளத்தையும், பூகம்பத்தையும் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சி இப் பூமியில் நடைபெறுகிறது. இவ்வாறாக நடைபெறும் இயற்கையின் அமைப்பை, நாம் நம் வாழ்வியலோடு ஒப்பிட்டு அதன் உண்மையை உணர வேண்டும். எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாக இருந்து பயன்படும் இயற்கை வளம், இது மனிதனுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது. இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு.
🕸️ இன்றைய தற்சோதனை
🕸️ தான், தனது என்று உங்களுடைய எண்ணத்தை சுருக்கிக்கொண்டால் அளவிட முடியாத திறமையையும், அறிவையும் உடைய மனித இனம் தன்னை, இந்த சிற்றறிவில் புதைத்துக் கொண்டு தன்னை இழந்து விட்டது. இந்த இழப்பு உடலிலே நோய், உள்ளத்திலே களங்கம், வாழ்க்கையில் சிக்கல் என்ற ஒழுங்கற்ற தன்மையாக மலர்கிறது.
🕸️ இன்றைய பண்புப் பயிற்சி
🕸️ பொய், சூது, களவு, கற்பழிப்பு, கொலை இந்த ஒழுங்கற்ற பண்பிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொண்டு சீரான ஞான பண்பில் உயர வேண்டும். நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு இதுவே மனிதன் வாழ வேண்டிய பண்பாகும்,இதுவே ஞானநிலையுமாகும். வாழ்க வளமுடன்...
🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🕸️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment