நித்தியக்கடன் ஜூன் 06 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 06


♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️


🕸️ இன்றைய நித்தியக்கடன்


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕸️ இன்றைய சாதகம்


🕸️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

🕸️ இன்றைய நற்சிந்தனை


🕸️ நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை நாம் கவனிக்கத் தவறிவிட்டோமென்றால், அதன் விளைவாக நாம் பெறவேண்டிய நன்மைகளையும் தவற விட்டு விடுவோம், என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும். உடல் நலத்திற்கான செயல் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளை கவனிக்க வேண்டும். மனவளத்திற்கான செயல் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளை கவனிக்க வேண்டும். இவை அனைத்தும் தன்னார்வத்தோடும், உயிருணர்வோடும் கடைபிடிக்கும் போது, இதன் விளைவாக வேறு ஒரு தளத்திற்கு நாம் செல்வோம் அது என்னவென்றால்...


🕸️ இன்றைய தற்சோதனை


🕸️ அறிவு ஆட்சி தரமுயரும், அறிவின் குறைபாடுகள் அனைத்தும் படிப்படியாக களையப்படும், உடல் நலமும் மனவளமும் ஒருங்கிணைந்து அமையப் பெற்ற மனிதனுக்குள் நல்லாட்சி தன்மை ஓங்கும், குறைவில்லாத ஜீவகாந்தம், குறைவில்லாத உயிரியக்கம் இவைகள் தான் அறிவாச்சி தரத்தின் பின்புலமாக இருப்பவைகள். இவைகளை முறையாக உயர்த்திக்கொள்ள சரியான பயிற்சி வேண்டும். அப்பயிற்சியை விடாமுயற்சியோடு கடைபிடிக்க வேண்டும்.


🕸️ இன்றைய பண்புப்பயிற்சி


🕸️ அவ்வாறாக நமக்கு அமைந்த சிறப்பான பயிற்சி முறைதான் வேதாத்திரியம் (உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை). இப்பயிற்சியின் விளைவுகள் அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக சிந்தித்து புரிந்து கொண்டு, எந்த வித மயக்க உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல், பயிற்சிகள் அனைத்தையும் நாள் தவறாமல் அளவுமுறை மீறாமல் கடைபிடிக்கும், ஒவ்வொரு கருமையத்திற்குள்ளும் கட்டாயம் ஞான விளைவு உதயமாகும். வாழ்க வளமுடன்...

 

🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🕸️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments