நித்தியக்கடன் மார்ச் 21 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 21


🔰💥🔰💥🔰💥🔰💥🔰💥🔰


🌬️ இன்றைய நித்தியக்கடன்


🌬️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌬️ இன்றைய சாதகம்


🌬️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

🌬️ இன்றைய நற்சிந்தனை


🌬️ ஒரு பள்ளமான இடத்தில் அந்த பள்ளத்தை நிரப்புவதற்கு நீரையும், காற்றையும், ஏன்? மண்ணையே கூட பயன்படுத்தலாம். இவ்வாறாக எதை பயன்படுத்தி வேண்டுமானாலும் ஒரு பள்ளத்தை நிரப்பலாம். எந்தப் பொருளைக் கொண்டு பள்ளத்தை நிரப்புகிறோமோ அதற்கு தக்கவாறு அந்த பள்ளத்தில் நிகழ்ச்சிகள் தொடரும். நம்முடைய மனதிலும் இது போன்று நிறைய பள்ளங்கள் இருக்கின்றன. அவைகளை நிரப்ப முயற்சி செய்யுங்கள்.


🌬️ இன்றைய தற்சோதனை


🌬️ எதைக்கொண்டு நிரப்பினால் நம்முடைய மனதில் உள்ள குறைபாடுகள், பள்ளங்கள், தீமைகள் முழுமையாக சரிசெய்யப்படும். அதனை கொண்டு அவைகளை நிரப்ப வேண்டும். நோய்வாய்ப்பட்ட அணுக்களை வெளியேற்றுவதற்கு ஆற்றல்மிக்க அணுக்கள் உற்பத்தியாக வேண்டும். அப்போதுதான் இறந்துபோன நோய்வாய்ப்பட்ட அணுக்களை வெளியேற்ற முடியும். நம் மனதில் நோய்வாய்ப்பட்ட தன்மை இறந்துபோன தன்மை அவைகளை வெளியேற்ற தன்னம்பிக்கையும், மிகுந்த ஆர்வத்தையும், மனோபாவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் இந்த மனோபலத்தை உருவாக்கித் தரும்.


🌬️ இன்றைய பண்புப் பயிற்சி


🌬️ ஒவ்வொரு கணமும் நம்மை நாமே கண்காணிக்க வேண்டும். நம்மை கண்காணிப்பதில் அணுவளவு கூட விலகிவிடக்கூடாது. அப்படி விலகும் போதெல்லாம் அது பெரிய துன்பத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். நம் வாழ்க்கையை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கண்காணிப்பு பண்பை வளர்த்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...

 

🌬️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌬️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌬️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments