வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 20
⛳🌌⛳🌌⛳🌌⛳🌌⛳🌌⛳
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 இந்த பூமியில் உள்ள கண்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தனித்துவம் வாய்ந்தது, ஒவ்வொன்றுக்கும் தன்மைகள் வேறுபடும். அதுபோன்றே நிலப்பரப்பில் வாழக்கூடிய உயிரினங்களுக்கும், தாவரங்களும், மனிதர்களுக்கும் அதே தன்மை மேலோங்கும். இது இயற்கையின் துல்லிய இயக்க சட்டமாகும். இந்த சட்டத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
🎱 இன்றைய தற்சோதனை
🎱 மண்ணின் தன்மை மாறும் போது மனிதர்களின் தன்மையும் மாறுகிறது. அது அவர்களுடைய கருமைய அமைப்பில் இருந்து உருவாகிறது. எந்த ஒரு மனிதனுடைய கருமையமும் ஒரே மாதிரியான தன்மையில் இருப்பது இல்லை. பொதுவாக கண்டங்களுக்கு ஏற்பவும், அத்தன்மைகளுக்கு ஏற்பவும் நிலப்பரப்பில் உள்ள உயிரினங்களுக்கு தனித்தனியாக, ஒவ்வொரு மனித கருமையத்திலும், அவர்களுடைய தன்மையே வெளிப்படும். எண்ணமாக, சொல்லாக, செயலாக இந்த தன்மைகளை நம்மால் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். தற்சோதனை, தவம், உடற்பயிற்சி, காயகல்பம் இந்த பயிற்சிகளின் மூலமாக.
🎱 இன்றைய பண்புப் பயிற்சி
🎱 கருமையத்தினுடைய தன்மையை மனிதர்களின் சிறப்பான செயல்களால் மாற்றி அமைக்க முடியும். அவர்களுடைய சிந்தனை, செயல்பாடு அறிவு நிலைக்கு ஏற்ப அவர்களுடைய செயல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பண்பில் எல்லா மனிதர்களும் உயர்வு பெற வேண்டும். அறிவின் தன்மையை உயர்த்திக் கொண்டு சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் எனும் இப்பண்புகளை எல்லோரிடத்திலும் மேலோங்க வேண்டும்.
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🎱 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment