நித்தியக்கடன் பிப்ரவரி 19 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 19


💫❄️💫❄️💫❄️💫❄️💫❄️💫


💥 இன்றைய நித்தியக்கடன்


💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💥 இன்றைய சாதகம்


💥 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.

 

💥 இன்றைய நற்சிந்தனை


💥 உடலையும் உடல் சார்ந்த ரகசியங்களையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் எதனால் ஆக்கப்பட்டது? இந்த உடல் இயங்குவதற்கான அடிப்படை காரணங்கள் எவை? இவைகளை எல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டால் தான் இந்த உடலை நடத்துவதில் நமக்கு சிக்கல்கள் இல்லாமலிருக்கும். நம் உடலில் இருக்கக்கூடிய நோயின் தன்மைகள் தனியும் போதும், அதே நோயின் தன்மைகள் அதிகரிக்கும் போதும், இரண்டுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வலியில் துவங்கி வலியிலேயே முடிவடையும்...


💥 இன்றைய தற்சோதனை


💥 மனப் பயிற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, மனதை பக்குவப்படுத்தி இதே நீதி செயலுக்குத் தக்க விளைவாக அமைந்து இயங்குவதையும், நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும் பலவிதமான கற்பனைகளை வைத்துக் கொண்டு, இந்த நுட்பமான இயக்க நீதியை நம்மால் உணர முடியாது. கற்பனைகளை எல்லாம் அறவே அகற்றி கொண்டு படிப்படியாக பண்படைவோம். தற்சோதனை செய்வோம். தனித்துவமான இறைநீதியை அதன் இயக்க சிறப்புகளை உணர்வோம்.


💥 இன்றைய பண்புப்பயிற்சி


💥 இதனை சீராக நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், நமக்குள் இருக்கக்கூடிய உணர்தல், துயித்தல், பிரித்து உணர்தல் இந்த திறமையை நாம் வளர்த்துக் கொண்டோமேயானால், இது நோய்கள் தனியும் அறிகுறியா! அல்லது நோய்கள் பெருகும் அறிகுறியா! என்று புரிந்து கொள்ள முடியும். இந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு அன்றாட பயிற்சி முறைகளை நாம் கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். வாழ்க வளமுடன்...

 

💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


💥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments