வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 18
🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 வேதாத்திரியத்தை ஒரு தத்துவமாக சிந்திக்கும் போதும், பயிற்சிகளுக்கு வெளியே நின்று பயிற்சிகளை செய்யும் போதும், சிலருக்கு இப்படி தோன்றுகிறது. வேதாத்திரியம் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது என்று.
பயிற்சிக்குள் ஊடுருவி நின்று மனதார ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை வாழத்துவங்குங்கள். வேதாத்திரியம் நடைமுறைக்கு சாத்தியமே என்ற உண்மை விளங்கும்.
🌸 இன்றைய தற்சோதனை
🌸 ஒட்டுமொத்தமாக உங்களை இந்த நிமிடம் முதல் மாற சொல்லவில்லை. இன்று சிந்தித்து எந்த அளவுக்கு மாற முடியுமோ, அந்த அளவு இன்று மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நாளை வரும் சூழ்நிலைகளை சிறுக, சிறுக மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். வேதாத்திரியம் முழுக்க, முழுக்க ஆராய்ச்சி, தெளிவு மற்றும் முடிவு எனும் அடிப்படி கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்டதாகும்.
🌸 இன்றைய பண்புப் பயிற்சி
🌸 முடியாது என்ற எண்ணத்தோடு எந்த ஒன்றையும் தொடராதீர்கள். அது தோல்விக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகும். முடியும் என்று விடாமுயற்சியோடும், விழிப்பு நிலையோடும் நிறைவாக பயணம் செய்யுங்கள். இது வெற்றியின் அடித்தளங்களை உருவாக்கித்தரும். இந்த பாக்கியம் உங்கள் அனைவருக்கும் உரியதாகும். இப் பண்பில் உயர்வோம். பயன்படுத்தி பயன்காணுங்கள். வாழ்க வளமுடன்...
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌸 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment