நித்தியக்கடன் பிப்ரவரி 11 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 11


🎲💢🎲💢🎲💢🎲💢🎲💢🎲


🚥 இன்றைய நித்தியக்கடன்


🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🚥 இன்றைய சாதகம்


🚥 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.

 

🚥 இன்றைய நற்சிந்தனை


🚥 மனதிலிருக்கும் நினைவுகளை தரம் பிரித்து அதன் விளைவை உணர்ந்து நன்மை தரும் எண்ணங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய நினைவுகளை, எண்ணங்களை அதனுடைய வலிமையை குறைத்து அமைதியாகி நம்முடைய காரியத்தில் வெற்றி பெற வேண்டும். இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.


🚥 இன்றைய தற்சோதனை


🚥 நமக்கு தொல்லை தரக்கூடிய தேவையில்லாத எண்ணங்களை வாழ்த்தும் போது அதனுடைய எதிர்மறையான தன்மைகள் மாறும். இவைகள் நமக்கு விரோதமாக இருந்து செயல் புரியாமல் இணக்கமான தன்மைக்கு மாறிவிடும். வாழ்த்துவது ஒரு சிறந்த வழிமுறையாகும். சிறுக, சிறுக சிந்தனையில் நல்லவைகள் முளைக்கத் துவங்கும். முழுமையாக நம்முடைய வாழ்க்கை நன்மையை நோக்கி நகரும். தற்சோதனை செய்து வாழ்த்தி பாருங்கள் வாழ்வதற்கான இடத்திற்கு வாருங்கள் "மனதிலிருந்து மனதிற்கு"


🚥 இன்றைய பண்புப் பயிற்சி


🚥 உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய வலிமை வாய்ந்த ஆயுதம் மனம். புற மனதிலிருந்து தேங்கித், தேங்கி துன்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைமையிலிருந்து நடு மனதிற்கும், ஆழ்மனதிற்கும் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் நடு மனதிலும், ஆழ்மனதிலும் இருக்கிறது. இந்த நடு மனதிற்கும், ஆழ்மனதிற்கும், செல்லக்கூடிய செயல் "அன்பும் கருணையும்." அனைத்தையும் அன்போடும் கருணையோடும் அரவணைத்துக் கொண்டு வாழும் இந்தப் பண்பில் உயர்ந்து வாருங்கள். முழுமையை நோக்கி பயணம் செய்யுங்கள். வாழ்க வளமுடன்...

 

🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🚥 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments