வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 03
🏮🔳🏮🔳🏮🔳🏮🔳🏮🔳🏮
🌿 இன்றைய நித்தியக்கடன்
🌿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌿 இன்றைய சாதகம்
🌿 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🌿 இன்றைய நற்சிந்தனை
🌿 மனம் எப்போதும் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டே இருக்கும். ஏதோ ஒன்றினுடைய பின்னால் பயணித்துக் கொண்டே இருக்கும். தன்னுடைய வாழ்நாட்களை சதாசர்வகாலமும் இப்படியே கடந்து சென்றுகொண்டே இருக்கும். இவ்வாறான மனதிற்கு சரியானதொரு பயிற்சியை வழங்கி, எதன் பின்னால் செல்ல வேண்டும், எதை சுமந்துகொண்டு பயணிக்க வேண்டும், என்பதை நாம்தான் மனதிற்கு புரிய வைக்க வேண்டும். இதனை புரியவைப்பதற்கு செய்யப்படும் முயற்சிக்கு பெயர்தான் யோக சாதனை.
🌿 இன்றைய தற்சோதனை
🌿 பயிற்சி கொடுத்தால் நாளைக்கே மனம் மாற்றம் பெற்று விடுமா? என்றால் இல்லை. அதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படும். உயிரின் மீது மனதிற்கு நம்பிக்கையும், மனதினுடைய தன்மைகளில் மாற்றங்களும் உருவாக வேண்டும். இந்த மாற்றங்களுக்கு பின்னால் அது தன்னுடைய சுயத்தை உணரத் துவங்கும். அவ்வாறு அது உணர துவங்கும் போது நமக்கு தெளிவும் மனநிறைவும் ஏற்படும். இவை யாவும் தற்சோதனையின் சாதனையாகும்.
🌿 இன்றைய பண்புப்பயிற்சி
🌿 மீண்டும் மீண்டும் மனதிற்கான பயிற்சியிலும், உடலுக்கான பயிற்சியிலும், உயிருக்கான பயிற்சியிலும் நாம் துவண்டு விடாமல் ஆர்வத்தோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆர்வமானது சிறிது காலம் வரையிலோ, அல்லது நேரம் கிடைக்கும் போது மட்டும் என்று எல்லை கட்டிய சிந்தனையோடு, திட்டத்தோடு துவங்காதீர்கள். தொலைநோக்கோடு இதனை புரிந்துகொண்டு, நீண்ட நெடிய உழைப்புக்கு பின்னால், முயற்சிக்குப் பின்னால் கிடைக்கும் வெற்றி இது என்ற உண்மையை உணர்ந்து, உள ஆர்வத்தோடு ஆன்மீக உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
🌿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌿 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment