வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 01
☘️🚥☘️🚥☘️🚥☘️🚥☘️🚥☘️
〽️ இன்றைய நித்தியக்கடன்
〽️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
〽️ இன்றைய சாதகம்
〽️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
〽️ இன்றைய நற்சிந்தனை
〽️ எந்த ஒரு பொருளையும் அது இருக்கும் இடத்திலேயே அப்படியே விட்டுவிட்டால், நாளாக நாளாக அந்த பொருளுக்கும் இடத்திற்கும் இணைப்பு அதிகரிக்கும். இதனுடைய தன்மை அதற்கும் அதனுடைய தன்மை இதற்கும் பரிவர்த்தனையாகும். ஒரு வருடம் இரண்டு வருடம் என்று சில வருடங்கள் கழித்துப் பார்த்தால் அந்த இடத்தைவிட்டு அந்த பொருளை நகர்த்துவதற்கு சற்று சிரமப்பட வேண்டியதாக இருக்கும்.
〽️ இன்றைய தற்சோதனை
〽️ இது போல மனதை இறைநிலையோடு இணைத்து நிலைக்கச் செய்து விட்டால் பலவிதமான நன்மைகளை நாம் அனுபவமாக உணர முடியும். இந்த பிறவிக்கு தகுந்த சிந்தனை, செயல், திறமை அனைத்தும் அங்கே அப்போது தான் முளைத்தெழும். இந்த புனிதமான காரியத்தில் தன்னை ஆர்வத்தோடு எவர் அர்ப்பணிப்பு உணர்வோடு, ஈடுபடுத்திக் கொண்டாலும் அவர்களின் அறிவு நாளுக்கு நாள் ஞானத்தில் உயர்வதை காணமுடியும்.
〽️ இன்றைய பண்புப்பயிற்சி
〽️ இறைநிலையில் தன்னிருக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றலுக்கு கீழாக உங்களுடைய மன காந்த இயக்கத்தையும், உடல் காந்த இயக்கத்தையும் அமைத்துக் கொண்டால் போதும். அந்த சூழ்ந்தழுத்தும் ஆற்றல் மூலமாக மட்டும் தான் நீங்கள் மையம் நோக்கி நகர முடியும். அவனைத் தவிர வேறு யாராலும் மையத்திற்குள் நம்மை அழைத்துச் செல்ல இயலாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அது உங்களுடைய கடமை. ஆனால் சூழ்ந்தழுத்தி மையம் நேக்கி அழைத்துச் செல்லவது அவனே ஆகும். வாழ்க வளமுடன்...
〽️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
〽️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
〽️ நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment