நித்தியக்கடன் டிசம்பர் 27 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 27


⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

 

🎲 இன்றைய நற்சிந்தனை


🎲 ஆயிரம் வகையான விதைகளை தூவி ஒரே இடத்தில் வளர்த்தாலும், எந்த விதை முளைத்து மரமாகவும், செடியாகவும், கொடியாகவும் வரும்போது அது எந்த வகையைச் சார்ந்தது என்று தெளிவாக தெரிந்துவிடும். விதையை மட்டும் வைத்து  இது இந்த மரம், இந்த செடி, இந்த கொடி, என்று சொல்வதற்கு சற்று அனுபவம் தேவை. அது இயலாத போது அது வளர்ந்த பிறகு தான் இன்னதென்று தெரியும். அதுவரை நாம் பொறுமையோடு தான் இருந்தாக வேண்டும்.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவர்களும் கிடையாது. எதுவுமே தெரியாதவர்களும் கிடையாது. அவரவர்களுடைய முயற்சிக்கும், அறிவு நிலைக்கும் ஏற்ப எல்லோருக்கும் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும். இதில் குறை இருக்கிறது, நிறைய இருக்கிறது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. அவரவர்களுடைய பழக்கவழக்கம், கல்வி அறிவு, அனுபவ அறிவு இதற்கேட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். குண்டலினி யோகத்தில் தவமும், தற்சோதனையும் செய்து, செய்து எல்லா விஷயங்களையும் அறிந்து புரிந்து கொள்ள முடியும்.


🎲 இன்றைய பண்புப் பயிற்சி


🎲 ஆன்மீக யோக வாழ்க்கையில் பொறுமையும் அமைதியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொறுமையோடு, அமைதியோடு இருந்து தான் நாம் எல்லா வகையான அனுபவங்களையும் எதிர்மறையான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாள, கற்றுக்கொள்ள முடியும். பொறுமையோடு, அமைதியோடு இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம், நம்மை நாம் உணர்வதற்கு நம்மை நாம் கடப்பதற்கு. வாழ்க வளமுடன்...

 

🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🎲 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments