வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 26
🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀
🌌 இன்றைய நித்தியக்கடன்
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌌 இன்றைய சாதகம்
🌌 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🌌 இன்றைய நற்சிந்தனை
🌌 காற்று ஒரு கண்ணாடி திரையை கடக்க முடியாது. ஆனால் ஒளி அலைகள் கடக்கும். ஒரு சுவற்றை காற்று கடக்க முடியாது ஆனால் வெப்பம் கடக்கும். இதுபோன்று மனதில் எதையுமே கடக்கும் தன்மை கடக்க முடியாதன்மை என்று இருக்கக் கூடாது. மனம் எல்லாவற்றையும் கடக்க வேண்டும். எல்லா நிலைகளையும், எல்லா நிகழ்ச்சிகளையும் கடக்க மனம் பழக வேண்டும். மனதிற்கு ஊடுருவும் திறமை இயல்பாகவே இருக்கிறது. ஆனால் அது பயிற்சிக்கு பின்னால் அமையும் தன்மையாகும்.
🌌 இன்றைய தற்சோதனை
🌌 மனதைப் பண்படுத்தி பக்குவப்படும் போது மனதின் சக்தி அதிகரிக்கிறது. மனம் எதற்குள்ளும் ஊடுருவும் திறமை பெறுகிறது. மனதிற்குள்ளும் எதுவும் ஊடுருவும் தன்மை உருவாகிறது. இந்த சிறப்பு மிக்க அமைப்பு மனிதர்களுக்கு மட்டுமே உரியதாகும். இதனை தியான பயிற்சியாலும், தற்சோதனை பயிற்சிகளாலும் சுலபமாக வளர்த்துக் கொள்ள முடியும்.
🌌 இன்றைய பண்புப் பயிற்சி
🌌 எதுவானாலும் இயல்பாக அமைதியாக இருந்து அதனை ஆராயக்கூடிய பண்பில் உயர வேண்டும். இந்த பண்பு தான் நமக்குள்ளாக இருக்கும் பழுதுகளை, கசடுகளை ஒழுங்கமைக்க வல்லது. நாளுக்கு நாள் ஆராய்ச்சி தன்மை பெருகப் பெருக எல்லா வகையான பழுதுகளும், கசடுகளும் உடலில் இருந்தும் மனதில் இருந்தும் அகற்றப்படும். ஆராய்ச்சியோடு கூடிய வாழ்க்கையே மனித வாழ்க்கை ஆகும். வாழ்க வளமுடன்..!
🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
🌌 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment