நித்தியக்கடன் டிசம்பர் 24 2022

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 24


🌿🎲🌿🎲🌿🎲🌿🎲🌿🎲🌿


🔘 இன்றைய நித்தியக்கடன்


🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔘 இன்றைய சாதகம்


🔘 சனிக்கிழமை 

காலை சாந்தி தவம்.மாலை துரியாதீதம் தவம்.

 

🔘 இன்றைய நற்சிந்தனை


🔘 ️அகமும் புறமும் ஒன்றேதான் இது ஒரு முனை அது ஒரு முனை, இன்பமும் துன்பமும் ஒன்றே தான் இது ஒரு முனை அது ஒரு முனை, பேராசையும் நிறை மனமும் ஒன்றே தான் இது ஒரு முனை அது ஒரு முனை, இறப்பும் பிறப்பும் ஒன்றுதான் அது ஒரு முனை இது ஒரு முனை. இந்த பூமியில் துருவப்பகுதியில் உள்ள உயிரினங்கள் தன்மைகள் வேறுபடுவதை போலத்தான் மேலே சொல்லப்பட்ட அனைத்தும், ஒரு முனையில் வேறொன்றாகவும் மற்றொரு முனையில் நேர் எதிராகவும் அமைந்திருக்கிறது. இவை அனைத்திலும் நடுநிலை வகிப்பதற்கு நாம் முறையாக ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான பயிற்சியினால் மட்டும்தான் நாம் நடுநிலையோடு எல்லாவற்றையும் சமமாக உணர முடியும்.


🔘 இன்றைய தற்சோதனை


🔘 முயற்சி இல்லாமல் பயிற்சி இல்லாமல் எந்த ஒன்றும் நமக்கு அமைந்துவிடாது. மாற்றங்களும் ஏற்படப் போவதும் இல்லை. ஒவ்வொரு மாற்றத்திற்காகவும் நாம் பல்வேறு வகையான முயற்சிகள் செய்ய வேண்டும். அவ்வாறான முயற்சியில் நமக்கு பலவிதமான இடர்பாடுகளும் சறுக்கல்களும் ஆங்காங்கே உருவாகவே செய்யும். இருப்பினும் அவைகளை கடந்து நாம் நம்முடைய இலக்கை அடைவதற்கு விடாமுயற்சியோடு இருந்து வெற்றி பெறவேண்டும்.


🔘 இன்றைய பண்புப்பயிற்சி


🔘 நம்முடைய மூளை செல்களுக்குள் முறையான இனிமையான அனுக்கள் சீராக அடுக்கப்பட்டு இயங்குமேயானால், இறைநிலையே நாமாக தன்மாற்றம் பெற்று  நமக்குள்ளாகவே இருப்பாகி இயங்கும் உண்மைநிலை அனுபவமாகும். மூளை செல்கள் முறையாக கட்டப்பட்டு அவைகளை சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டும். இதுவே அறிவின் முழுமை பேறுமாகும். உணர்சிவயம், கவலை, முறையற்ற எண்ணம், சொல், செயல் இவற்றால் அனுஅடுக்கு சிதைவடையும் கவனமுடன் நம்மை கண்காணித்துக்  கடைத்தேறுவோம். வாழ்க வளமுடன்...

 

🔘 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔘 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🔘 நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments